நகராட்சிக்கான வரி பாக்கியை உடனே செலுத்த அறிவுறுத்தல்
குடியாத்தம் நகராட்சிக்கு பொதுமக்கள், வணிக நிறுவனங்கள் செலுத்த வேண்டிய வரியினங்களை உடனே செலுத்தி, நகரின் வளர்ச்சிப் பணிகளுக்கு உதவ
குடியாத்தம் நகராட்சிக்கு பொதுமக்கள், வணிக நிறுவனங்கள் செலுத்த வேண்டிய வரியினங்களை உடனே செலுத்தி, நகரின் வளர்ச்சிப் பணிகளுக்கு உதவ வேண்டும் என்று நகராட்சி ஆணையர் கேட்டுக் கொண்டுள்ளார்.
நகராட்சிக்கு பொதுமக்கள், வணிக நிறுவனங்கள் செலுத்த வேண்டிய வரியினங்கள் ரூ. 6 கோடியே 38 லட்சம் பாக்கி உள்ளது. சொத்துவரி ரூ. 3 கோடியே 86 லட்சம். குடிநீர்க் கட்டணம் ரூ. 1 கோடியே 26 லட்சம், குத்தகை இனங்கள் ரூ. 52 லட்சம், தொழில்வரி ரூ. 74 லட்சம் என பாக்கியுள்ளது.
இந்த அறிவிப்பு கண்டவுடன் வரி நிலுவை வைத்துள்ளவர்கள் உடனடியாக வரிபாக்கியைச் செலுத்தி நகராட்சிக்கு ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
தவறும்பட்சத்தில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு, ஜப்தி நடவடிக்கை, வழக்கு தொடர்வது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என நகராட்சி ஆணையர் (பொறுப்பு) பி. சங்கர் தெரிவித்துள்ளார்.