"மக்கள் சேவைக்காக வாழ்க்கையை தியாகம் செய்தவர் ஜீன் ஹென்றி டூனன்ட்'
மக்கள் சேவைக்காக தனது சொந்த வாழ்க்கையையே தியாகம் செய்தவர் செஞ்சிலுவைச் சங்கத்தை நிறுவிய ஜீன் ஹென்றி டூனன்ட் என வேலூர் திருவள்ளுவர் பல்கலைக் கழகத் துணைவேந்தர் க.முருகன் கூறினார்.
வேலூர்"மக்கள் சேவைக்காக வாழ்க்கையை தியாகம் செய்தவர் ஜீன் ஹென்றி டூனன்ட்'
மக்கள் சேவைக்காக தனது சொந்த வாழ்க்கையையே தியாகம் செய்தவர் செஞ்சிலுவைச் சங்கத்தை நிறுவிய ஜீன் ஹென்றி டூனன்ட் என வேலூர் திருவள்ளுவர் பல்கலைக் கழகத் துணைவேந்தர் க.முருகன் கூறினார்.
மக்கள் சேவைக்காக தனது சொந்த வாழ்க்கையையே தியாகம் செய்தவர் செஞ்சிலுவைச் சங்கத்தை நிறுவிய ஜீன் ஹென்றி டூனன்ட் என வேலூர் திருவள்ளுவர் பல்கலைக் கழகத் துணைவேந்தர் க.முருகன் கூறினார்.
வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழக இளையோர் செஞ்சிலுவைச் சங்கம் சார்பில், யூத் அண்டு ஹெல்த் என்ற தலைப்பில் மண்டல அளவிலான தன்னார்வலர்கள் மற்றும் அலுவலர்களுக்கான 3 நாள் புத்தாக்கப் பயிற்சி முகாம் பல்கலைக்கழக வளாக பல்நோக்கு கலையரங்கில் புதன்கிழமை தொடங்கியது. இதில் ரத்த தானம், முதலுதவி, உடல் நலம், பேரிடர் மேலாண்மை குறித்து பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது.
இளையோர் பல்கலைக்கழகப் பொருளியல் துறைத் தலைவர் சி.தண்டபாணி வரவேற்றார். பல்கலைக்கழகத் துணைவேந்தர் க.முருகன் ஜீன் ஹென்றி டூனன்ட்டின் உருவப் படத்தை திறந்து வைத்தார். பின்னர், முகாமைத் தொடங்கி வைத்து அவர் பேசியதாவது:
மக்கள் சேவைக்காக தனது சொந்த வாழ்க்கையையே தியாகம் செய்தவர் செஞ்சிலுவைச் சங்கத்தை நிறுவிய ஜீன் ஹென்றி டூனன்ட். அவரது தியாகத்தையும், சேவையையும் நினைவுபடுத்தவும், அவரைப் போல் மக்கள் சேவையில் மாணவர்களை ஈடுபட வைப்பதே இந்த புத்தாக்கப் பயிற்சி முகாமின் நோக்கம் ஆகும்.
இதற்கான விழிப்புணர்வை மாணவ சமுதாயத்தினரிடையே ஏற்படுத்துவது இளையோர் செஞ்சிலுவைச் சங்க தன்னார்வலர்கள் மற்றும் திட்ட அலுவலர்களின் முக்கியக் கடமையாகும் என்றார்.
பல்கலைக்கழகப் பதிவாளர் (பொறுப்பு) வெ.பெருவழுதி, பல்கலைக்கழக ஆட்சி மன்றக் குழு உறுப்பினர் ரமணன், வேதியியல் துறைத் தலைவர் சையத் ஷபி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
பல்கலைக்கழக பதிவாளர் பா.செந்தில்குமார், இளையோர் செஞ்சிலுவை சங்க மாவட்ட அமைப்பாளர் ஆமினாள் பிபி, பல்கலைக்கழகப் பொருளியல் துறை உதவிப் பேராசிரியர் ப.சென்னகிருஷ்ணன், நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் ம.செந்தில்குமார் மற்றும் தன்னார்வலர்கள் இளையோர் செஞ்சிலுவை சங்க திட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர். பொருளியல் துறை இணைப் பேராசிரியர் ஒய்.யோகானந்தம் நன்றி கூறினார்.