முகப்பு
வேலூர்

இரு சக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்த பெண் சாவு

வேலூர் அருகே இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண் கீழே விழுந்ததில் படுகாயமடைந்து ஞாயிற்றுக்கிழமை இறந்தார்.

Updated On : 10 ஜூலை, 2018 at 12:56 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:40 PM

வேலூர் அருகே இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண் கீழே விழுந்ததில் படுகாயமடைந்து ஞாயிற்றுக்கிழமை இறந்தார்.
வேலூர் அருகே பென்னாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த கண்ணப்பனின் மனைவி மகாலட்சுமி (45). 
இவர் தனது மகன் ஹரிகிருஷ்ணனுடன் சித்தேரியில் இருந்து தொரப்பாடிக்கு இரு சக்கர வாகனத்தில் சனிக்கிழமை மாலை சென்றார்.  அப்போது திடீரென இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து கீழே சாய்ந்தது. 
அதில் பலத்த காயமடைந்த மகாலட்சுமி, வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர், மேல்சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கு இறந்தார். அரியூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.