முகப்பு
வேலூர்

மாணவிக்குப் பாராட்டு

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்பில் சேர்ந்த வாணியம்பாடி ஷெம்போர்டு பள்ளி மாணவியை பள்ளி நிர்வாகிகள் பாராட்டினர். 

Updated On : 10 ஜூலை, 2018 at 12:57 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:40 PM

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்பில் சேர்ந்த வாணியம்பாடி ஷெம்போர்டு பள்ளி மாணவியை பள்ளி நிர்வாகிகள் பாராட்டினர். 
வாணியம்பாடியை அடுத்த சின்னகல்லுப்பள்ளியில் உள்ள ஷெம்போர்டு சீனியர் செகண்ட்ரி சிபிஎஸ்இ பள்ளியைச் சேர்ந்த 13 மாணவர்கள் அண்மையில் நடைபெற்ற நீட் தேர்வை எழுதினர். இதில் 8 பேர் வெற்றி பெற்றனர். இவர்களில் மாணவி கீர்த்தனா அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கான கலந்தாய்வில் கலந்துகொண்டு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்புக்கான இடத்தைப் பிடித்தார். 
சாதனை படைத்த மாணவி கீர்த்தனாவுக்கு, பள்ளி வளாகத்தில் வெள்ளிக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது. விழாவில் பள்ளித் தலைவர் சுப்பிரமணியம், செயலாளர் கிருபாகரன் மற்றும் அறக்கட்டளை உறுப்பினர் சிங்காரவேலன் உள்ளிட்டோர் பதக்கம் மற்றும் பரிசுகளை அளித்து பாராட்டினர்.  சாதனை படைத்த மாணவிக்கும், அதற்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்களுக்கு பள்ளி முதல்வர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.