வாக்குச்சாவடி மையங்களில் வட்டாட்சியர் ஆய்வு
ஆம்பூர் அருகே கிராமப் பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்களை ஆம்பூர் வட்டாட்சியர் சனிக்கிழமை ஆய்வு செய்தார்.
ஆம்பூர் அருகே கிராமப் பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்களை ஆம்பூர் வட்டாட்சியர் சனிக்கிழமை ஆய்வு செய்தார்.
ஆம்பூர் வட்டம், வெங்கடசமுத்திரம், மிட்டாளம் ஊராட்சிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்களை ஆம்பூர் வட்டாட்சியர் சுஜாதா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். வாக்குச்சாவடி மையங்களில் உள்ள வசதிகள், அங்கு பராமரிப்பு செய்ய வேண்டிய பணிகள் குறித்து வருவாய்த் துறை பணியாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
தலைமை நில அளவையர் சேகர், தேர்தல் பிரிவு உதவியாளர் கண்ணன், துத்திப்பட்டு வருவாய் அலுவலர் வேல்முருகன், தேர்தல் பிரிவைச் சேர்ந்த பிரபுகுமார், கிராம நிர்வாக அலுவலர் ராஜேந்திர பிரசாத், வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் முருகேசன், ராஜக்கிளி, பாரதி ஆகியோர் உடனிருந்தனர்.