முகப்பு
வேலூர்

9 வட்டாட்சியர்கள் இடமாற்றம்

வேலூர் மாவட்டத்தில் பணியாற்றி வரும் 9 வட்டாட்சியர்களை இடமாற்றம் செய்து ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் வியாழக்கிழமை உத்தரவிட்டார்.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:22 PM
பகிர்:

வேலூர் மாவட்டத்தில் பணியாற்றி வரும் 9 வட்டாட்சியர்களை இடமாற்றம் செய்து ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் வியாழக்கிழமை உத்தரவிட்டார்.
பெங்களூர்-சென்னை விரைவுச் சாலை திட்டத்தின் வேலூர் மாவட்ட நில எடுப்பு தனி வட்டாட்சியராகப் பணியாற்றும் டி.மதிவாணன் அரக்கோணம் சமூகப் பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியராகவும், தற்போது அரக்கோணம் சமூகப் பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியராக உள்ள பி.ஜெயந்தி காட்பாடி வட்டாட்சியராகவும், அந்தப் பொறுப்பில் உள்ள பி.பாஸ்கர் குடியாத்தம் ஆதிதிராவிடர் நல உதவி வட்டாட்சியராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.
தற்போது குடியாத்தம் ஆதிதிராவிடர் நல உதவி வட்டாட்சியராக உள்ள கே.பி.மகாலிங்கம் பேர்ணாம்பட்டு வட்டாட்சியராகவும், அந்தப் பொறுப்பில் உள்ள பி.எஸ்.மாதவன் பெங்களூர்-சென்னை விரைவுச் சாலைத் திட்டத்தின் வேலூர் மாவட்ட நிலஎடுப்பு தனி வட்டாட்சியராகவும், அந்தப் பொறுப்பில் உள்ள டி.ஸ்ரீராம் மாவட்ட வழங்கல், நுகர்பொருள் பாதுகாப்பு அலுவலக நேர்முக உதவியாளராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், சிப்காட்-பனப்பாக்கம் திட்ட நிலஎடுப்பு தனி வட்டாட்சியராக உள்ள ஆர்.பாபு அரக்கோணம் வட்டாட்சியராகவும், அந்தப் பொறுப்பில் உள்ள பி.வேணுகோபால் நெமிலி வட்டாட்சியராகவும், அந்தப் பொறுப்பில் உள்ள என்.பாஸ்கரன் அரக்கோணம், ராணிப்பேட்டை டாஸ்மாக் கலால் மேற்பார்வை அலுவலராகவும் இடமாற்றம் செய்யப்பட்டதுடன், என்.பாஸ்கரன் திண்டிவனம்-நகரி ரயில்ப் பாதைத் திட்ட நிலஎடுப்பு பணியைக் கூடுதல் பொறுப்பாகக் கவனிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →