முகப்பு
வேலூர்

பெண்ணிடம் 8 பவுன் நகை பறிப்பு

திருப்பத்தூரில் பெண்ணிடம் 8 பவுன் நகையை மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர்.

Updated On : 30 மார்ச், 2018 at 1:08 AM
பகிர்:

திருப்பத்தூரில் பெண்ணிடம் 8 பவுன் நகையை மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர்.
திருப்பத்தூர் ராமக்காப்பேட்டையைச் சேர்ந்த ரவிசந்திரனின் மனைவி தனலட்சுமி (45). இவர், புதன்கிழமை தனது கணவருடன் பைக்கில் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது, பைக்கில் தலைக்கவசம் அணிந்து வந்த மர்ம நபர்கள் இருவர் தனலட்சுமி கழுத்தில் இருந்த 8 பவுன் தாலிச் சரடை பறிக்க முயன்றனர். தனலட்சுமி தாலி சரடை விடாமல் இழுத்து பிடித்த போது, மர்ம நபர்கள் அவரை கீழே தள்ளி நகையை பறித்துச் சென்றனர்.
இதுகுறித்து திருப்பத்தூர் நகர போலீஸார் வழக்குப் பதிந்து, மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.