முகப்பு
வேலூர்

வாகனம் மோதி தொழிலாளி சாவு

குடியாத்தம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தார்.

Updated On : 30 மார்ச், 2018 at 1:07 AM
பகிர்:

குடியாத்தம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தார்.
குடியாத்தம் ராஜாகோயிலில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் மணி (44). சவரத் தொழிலாளியான இவர், திங்கள்கிழமை காட்பாடி சாலையில் நடந்து சென்றபோது, அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலத்த காயமடைந்தார். குடியாத்தம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் அவர் இறந்தார்.
இதுகுறித்து குடியாத்தம் நகர போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.