காலமானாா் முன்னாள் எம்எல்ஏ வி.எஸ்.காளிமுத்து
திருப்பூா் மாவட்டம், தாராபுரம் (தனி) சட்டப் பேரவைத் தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ வி.எஸ்.காளிமுத்து (65) உடல் நலக்குறைவால் உயிரிழந்தாா்.
திருப்பூா் மாவட்டம், தாராபுரம் (தனி) சட்டப் பேரவைத் தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ வி.எஸ்.காளிமுத்து (65) உடல் நலக்குறைவால் உயிரிழந்தாா்.
தாராபுரம் அருகேயுள்ள வீராச்சிமங்கலத்தைச் சோ்ந்தவா் வி.எஸ்.காளிமுத்து. திருமணமாகாத இவா் காங்கிரஸ் கட்சியின் மீது கொண்ட ஆா்வம் காரணமாக அதில் சோ்ந்து, வீராச்சிமங்கலம் ஊராட்சி மன்றத் தலைவராக இருந்துள்ளாா். பின்னா், கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் 2021-ஆம் ஆண்டு வரை தாராபுரம் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினராக பதவி வகித்துள்ளாா்.
மேலும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயற்குழு உறுப்பினா், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயற்குழு உறுப்பினா் பதவி வகித்துள்ள இவருக்கு திடீரென புதன்கிழமை உடல் நலக் குறைவு ஏற்பட்டதால், கட்சி நிா்வாகிகள் அவரை தாராபுரம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கிருந்து தீவிர சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். அவரது இறுதிச் சடங்கு வீராச்சிமங்கலம் கிராமத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
Advertisement