தமிழ்நாடு காங்கிரஸ் தேர்தல் அறிக்கை நாளை வெளியீடு!
தமிழ்நாடு காங்கிரஸ் தேர்தல் அறிக்கை நாளை வெளியாகிறது.
சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி தமிழ்நாடு காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு. செல்வப்பெருந்தகை நாளை வெளியிடுகிறார்.
இது தொடர்பாக, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
எதிர்வரும் 2026 சட்டமன்றத் தேர்தலையொட்டி தமிழ்நாடு காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ., நாளை (ஏப். 9) வியாழக்கிழமை காலை 11 மணிக்கு, சென்னை சத்தியமூர்த்தி பவனில், வெளியிடுகிறார்.
Advertisement
Advertisement
இதன் முதல் பிரதியை நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் சா. பீட்டர் அல்போன்ஸ் பெற்றுக் கொள்கிறார். தேர்தல் அறிக்கை தயாரிப்புக்குழு தலைவர் கார்த்தி ப சிதம்பரம், எம்.பி., தொடக்கவுரை நிகழ்த்துகிறார். தேர்தல் அறிக்கை தயாரிப்புக்குழு உறுப்பினர்கள் உடன் பங்கேற்கிறார்கள்.
முன்னதாக, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் குமரி அனந்தனின் முதலாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்படவுள்ளது.
இந்நிகழ்ச்சிகளில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர்கள், முன்னாள் மத்திய அமைச்சர்கள், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள், மூத்த காங்கிரஸ் நிர்வாகிகள், நாடாளுமன்ற, சட்டமன்ற இந்நாள்- முன்னாள் காங்கிரஸ் உறுப்பினர்கள், சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், சர்க்கிள், வட்ட தலைவர்கள் மற்றும் அதன் நிர்வாகிகள், பெருநகர சென்னை மாமன்ற காங்கிரஸ் உறுப்பினர்கள், முன்னணி அமைப்புகள், துறைகள் மற்றும் பிரிவுகளின் தலைவர்கள் அதன் நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவரும் பங்கேற்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Ahead of the Assembly elections, Tamil Nadu Congress Committee President K. Selvaperunthagai will release the Tamil Nadu Congress election manifesto tomorrow.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.