எம்.பி.க்களுக்கு தேவையானது இதுதான்... ஜோதிமணி கோரிக்கை
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அலுவலகம் கட்டித் தர வேண்டும் என தமிழக அரசுக்கு ஜோதிமணி எம்.பி. கோரிக்கை விடுத்தது குறித்து...
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அலுவலகம் கட்டித் தர வேண்டும் என தமிழக அரசுக்கு காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி கோரிக்கை விடுத்துள்ளார்.
கோவையில் செய்தியாளர்கள் சந்திப்பில் ஜோதிமணி எம்.பி. பேசியதாவது, "நாடாளுமன்ற உறுப்பினரோ சட்டப்பேரவை உறுப்பினரோ எல்லோருமே வசதியாக இருப்பதில்லை. எம்.பி.க்களுக்கும் தேவை என சில இருக்கின்றன.
எம்எல்ஏ, எம்.பி. என யாராக இருந்தாலும், அவர்களின் தொகுதியில் அனைத்து ஊர்களுக்கும் செல்ல வேண்டியிருக்கும். ஆனால், அவர்களால் அனைத்து ஊர்களுக்கும் சென்றுவிட முடியாது. பிரதமர் மோடி ஆட்சியில் பெட்ரோல் குறைந்த விலையில் இருக்கிறதா?
Advertisement
Advertisement
என்னுடைய தொகுதியில் 4 மாவட்டங்கள் வருகின்றன. திண்டுக்கல், திருச்சி, கரூர், புதுக்கோட்டை என திண்டுக்கல் ஆட்சியரகத்தில் தொடங்கி, புதுக்கோட்டை ஆட்சியரகத்தில் எனது தொகுதி முடிவடைகிறது. இதில் எரிபொருள் செலவு எவ்வளவு இருக்கிறது?
நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள் நேர்மையாக இருக்க வேண்டுமெனில், அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை அர்சௌ செய்து தருவதில் தவறில்லை.
எம்.பி.க்கள் சார்பாகவும் கோரிக்கை உள்ளது. தமிழ்நாட்டில் எம்.பி.க்களுக்கென தனி அலுவலகம் கிடையாது. அரசு கட்டிக் கொடுத்த அலுவலகங்கள் எதுவும் கிடையாது. நான் 7 ஆண்டுகால போராட்டத்துக்குப் பிறகே ஓர் அலுவலகத்தை வாங்கியுள்ளேன்.
ஆகையால், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக, மக்கள் எளிதில் வந்து செல்லும்வகையில், தமிழ்நாடு அரசு அலுவலகம் கட்டித் தர வேண்டும். எங்களுக்கு கார் எதுவும் வேண்டாம்" என்று தெரிவித்தார்.
Congress MP Jothimani requests the Tamil Nadu government to construct offices for Members of Parliament
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.