வேலூர்

கோயில் கட்ட எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மனு

DIN

ஆற்காட்டை அடுத்த சித்தேரி மதகு அருகே வழியை ஆக்கிரமித்து கோயில், மண்டபம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள்ஆற்காடு வட்டாட்சியரிடம் வியாழக்கிழமை மனு அளித்தனர். 
இதுதொடர்பாக ஆற்காடு வட்டாட்சியர் சுமதியிடம் பொதுமக்கள் அளித்த மனு:  
திமிரி பாத்திகாரன் பட்டி சித்தேரி மதகு அருகே நீர்வழிப் பாதை உள்ளது. அதே பகுதியைச் சேர்ந்த சிலர் அங்கு அம்சவேணி அம்மன் கோயில் மற்றும் மண்டபம் கட்டுகின்றனர். இதனால் அவ்வழியாக நிலங்களுக்குச் செல்வதிலும், விளை பொருள்களை எடுத்துவருவதிலும் சிரமம் உள்ளது. எனவே, சித்தேரி மதகு பகுதியில் கோயில் கட்டுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என மனுவில் கூறியுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவில் இணைந்தார் தில்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி

உலகை அள்ளுங்கள், சிவப்பைத் தீட்டுங்கள்! ஜோதிகா...

நெல்லை காங். நிர்வாகி ஜெயக்குமார் உடல் பிரேத பரிசோதனை

தில்லியில் கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு

பாஜகவின் பொய்யான வாக்குறுதிகளால் சலிப்படைந்த மக்கள்: கெலாட்

SCROLL FOR NEXT