வேலூர்

பிறந்து 2 நாள்களே ஆன குழந்தையை கருணை இல்லத்தில் விட்டுச் சென்ற தாய்

DIN

வாணியம்பாடியில் பிறந்த 2 நாள்களே ஆன ஆண் குழந்தையை கருணை இல்லத்தில் அரசு தொட்டில் குழந்தைத் திட்டத்தின் கீழ் வைக்கப்பட்டுள்ள தொட்டிலில் தாய் போட்டுவிட்டுச் சென்றார். அக்குழந்தை திருப்பத்தூர் சிறப்பு தத்தெடுப்பு இயக்குநரிடம் ஒப்படைக்கப்பட்டது.
வாணியம்பாடி பெருமாள்பேட்டையில் இயங்கி வரும் கருணை இல்லத்தின் வெளியே தமிழக அரசின் திட்டங்களில் ஒன்றான தொட்டில் குழந்தைத்  திட்டம் சார்பில் தொட்டில் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சனிக்கிழமை காலை 10 மணியளவில் பிறந்து 2 நாள்களான ஆண் குழந்தையை அதன் தாய் அந்தத் தொட்டிலில் போட்டுவிட்டு சென்றிருப்பதை அறிந்த இல்ல நிர்வாகி டேவீட் சுபாஷ் உடனடியாக மாவட்ட சமூக நலத் துறைக்கும், நகர காவல் நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தார்.
அதன்பேரில் அனைத்து மகளிர் போலீஸார் அங்கு வந்து விசாரித்தனர். மேலும், மாவட்ட சமூக நல அலுவலர் சாந்தி வாணியம்பாடி கருணை இல்லத்துக்கு வந்து தொட்டிலில் போடப்பட்டுள்ள குழந்தையைப் பார்த்தார்.  பின்னர், திருப்பத்தூர் சிறப்பு தத்தெடுப்பு நிறுவன இயக்குநர் தமிழரசிசை வரவழைத்து, இல்ல நிர்வாகி டேவிட் சுபாஷ் குழந்தையை ஒப்படைத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மதுபானக் கடைகளுக்கு நாளை விடுமுறை

கல்லூரி மாணவா்களை பாதி வழியில் இறக்கிவிட்ட தனியாா் பேருந்துகள் சிறைபிடிப்பு

பிரதமரைக் கண்டித்து காங்கிரஸ் மகளிரணி ஆா்ப்பாட்டம்

சாத்தான்குளம் பகுதியில் தொடங்கியது கொல்லாம்பழம் சீசன்: கிலோ ரூ.100க்கு விற்பனை

கழுகுமலையில் மழை வேண்டி மாணவி யோகாசனம்

SCROLL FOR NEXT