முகப்பு
வேலூர்

வீடுகளில் நகை திருடிய இளைஞர் கைது

ஆற்காடு அருகே பல்வேறு பகுதிகளில் வீடுகளில் நகை திருடியதாக இளைஞரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

Updated On : 9 அக்டோபர் 2018, 3:01 am IST
பகிர்:


ஆற்காடு அருகே பல்வேறு பகுதிகளில் வீடுகளில் நகை திருடியதாக இளைஞரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
ஆற்காட்டை அடுத்த விளாபாக்கம் பகுதியில் இளைஞர் ஒருவர் வீடுகளை நோட்டமிட்டுக் கொண்டிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் ஆற்காடு நகர போலீஸார் வெள்ளிக்கிழமை அங்கு சென்று, அந்த இளைஞரைப் பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். 
விசாரணையில் அவர், திமிரியை அடுத்த வளையாத்தூர் பகுதியைச் சேர்ந்த தினகரன் (29) என்பதும், இவர் பல பகுதிகளில் வீடுகளை நோட்டமிட்டு, ஆள்கள் இல்லாதபோது, பூட்டை உடைத்து தங்க நகைகளை திருடியதும், இவர் மீது திமிரி, ஆற்காடு, ராணிப்பேட்டை, வாலாஜாபேட்டை, ரத்தினகிரி ஆகிய காவல் நிலையங்களிலும் பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளதும் 
தெரியவந்தது. 
இதையடுத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து, தினகரனைக் கைது செய்து, அவரிடமிருந்து 27 சரவன் நகைகளைப் பறிமுதல் செய்து, கைது செய்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.