வேலூர்

பல்லுயிர்ப் பாதுகாப்பு ஓவியப் போட்டி: நூற்றுக்கணக்கான மாணவர்கள் பங்கேற்பு

DIN

பல்லுயிர் பாதுகாப்பு குறித்த மாவட்ட அளவிலான  ஓவியப் போட்டி வேலூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
மாணவர்களிடம் மரம் வளர்ப்பு பழக்கத்தை அதிகரிக்கும் நோக்கத்தில் ஈஷா பசுமை பள்ளி இயக்கம் எனும் திட்டத்தை ஈஷா அறக்கட்டளை தமிழக பள்ளிக் கல்வித் துறையுடன் இணைந்து செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் வேலூர் மாவட்டத்தில் 175 பள்ளிகள் இணைந்துள்ளன. ஒரு பள்ளிக்கு 2 ஆயிரம் மரக்கன்றுகள் வீதம் ஓராண்டில் மாவட்டம் முழுவதும் 3.50 லட்சம் மரக் கன்றுகள் உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மரக் கன்றுகள் அந்தந்த பள்ளி மாணவர்களின் வீடுகளில் நடப்பட்டு அவற்றை மாணவர்களே பராமரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே, மாணவர்களிடம் பல்லுயிர் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த கருத்தரங்கம், மாவட்ட அளவிலான ஓவியப் போட்டி வேலூர் அரசு முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டது. 
வேலூர் மாவட்ட பள்ளிக் கல்வித் துறையும், ஈஷா பசுமை பள்ளி இயக்கமும் இணைந்து நடத்திய இந்தக் கருத்தரங்கில் மெட்ரிக். பள்ளிகளின் இயக்குநர் ச.கண்ணப்பன் பேசியதாவது: சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்கு மரம் வளர்ப்பு என்பது  மிகவும் அவசியமாகும். அதிக அளவு மரங்களை வளர்த்தால் கார்பன்- டை ஆக்ஸைடின் அளவை குறைத்து ஆக்ஸிஜனின் அளவை  அதிகரிக்க முடியும். போதிய அளவில் மழை பெய்வதற்கும் மரங்கள் மிகவும் அவசியமாகும். எனவே, மாணவர்களிடம்  மரம் வளர்க்கும் பழக்கத்தை அதிகரிக்க வேண்டும். அதற்கு ஈஷா பசுமை பள்ளி இயக்கம் நிச்சயம்  உறுதுணையாக இருக்கும் என நம்புகிறோம் என்றார் அவர்.
ஓவியப் போட்டிகளில் நூற்றுக்கணக்கான பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். 
நிகழ்ச்சியில், வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மார்ஸ், ஈஷா பசுமை பள்ளி இயக்க ஒருங்கிணைப்பாளர் சுவாமி ரப்யா, பல்லுயிர்ப் பாதுகாப்புத் துறை வல்லுனர் சத்தியநாராயணா, டிகேஎம் கல்லூரியின் உயிரியல் துறைத் தலைவர் தேவி, வேலூர் அரசு முஸ்லிம் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் கவுஷ்பாஷா ஆகியோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

SCROLL FOR NEXT