முகப்பு
வேலூர்

அனுமதியின்றி பட்டாசு விற்பனை செய்தவர் கைது

ஆற்காடு அருகே அனுமதியின்றி பட்டாசு விற்பனை செய்தவரை போலீஸார் கைது செய்தனர். 

Updated On : 22 அக்டோபர், 2018 at 5:58 AM
பகிர்:

ஆற்காடு அருகே அனுமதியின்றி பட்டாசு விற்பனை செய்தவரை போலீஸார் கைது செய்தனர். 
ஆற்காடு நகர போலீஸார் கலவை சாலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். 
அப்போது, அங்குள்ள கடையில் அனுமதியின்றி பட்டாசு விற்பனை செய்த ஆற்காடு பகுதியைச் சேர்ந்த முஷ்டாக்கை (32) போலீஸார் கைது செய்து, விசாரணை நடத்தி 
வருகின்றனர். 
மேலும், அவரிடமிருந்து ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.