முகப்பு
வேலூர்

கட்டுமானப் பொருள் விழுந்து தொழிலாளி சாவு

நாட்டறம்பள்ளியில் கட்டுமானத்துக்கு பயன்படும் இரும்புத் தட்டு தலை மீது விழுந்து தொழிலாளி இறந்தார்.

Updated On : 22 அக்டோபர், 2018 at 6:03 AM
பகிர்:

நாட்டறம்பள்ளியில் கட்டுமானத்துக்கு பயன்படும் இரும்புத் தட்டு தலை மீது விழுந்து தொழிலாளி இறந்தார்.
நாட்டறம்பள்ளி மகாத்மா காந்தி தெருவைச் சேர்ந்தவர் சாமுடி (60). தொழிலாளியான, இவர் ஞாயிற்றுக்கிழமை நாட்டறம்பள்ளி பேருந்து நிலையம் அருகே தேவராஜ் என்பவர் புதிதாக கட்டி வரும் திருமண மண்டபக் கட்டுமானப் பணிக்கு வேலைக்குச் சென்றுள்ளனர். பிற்பகல் 1 மணியளவில் மதிய உணவு சாப்பிட்டுவிட்டு சாமுடி, மண்டபத்தின் அருகே தொழிலாளர்களுடன் பேசிக் கொண்டிருந்தாராம். 
அப்போது, பூசாரியூர் பகுதியைச் சேர்ந்த தொழிலாளி சேகர், கட்டடத்தின் மேல்தளத்தில் இரும்பு பிளேட்டு (தட்டு) மற்றும் கட்டுமானப் பொருள்களைப் பிரித்துக் கொண்டிருந்தார். அப்போது, திடீரென மேல்தளத்திலிருந்து இருந்து இரும்புத் தட்டு தவறி சாமுடி மீது விழுந்தது. இதில், பலத்த காயமடைந்த சாமுடியை அருகே இருந்தவர்கள் மீட்டு, வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் இறந்தார்.
இதுகுறித்து நாட்டறம்பள்ளி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.