முகப்பு
வேலூர்

கருணாநிதிக்கு புகழஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி

ஆம்பூரில் வேலூர் மேற்கு மாவட்ட திமுகவின் விவசாயத் தொழிலாளர் அணியும், மாவட்ட ஆதிதிராவிட குழு

Updated On : 22 அக்டோபர், 2018 at 6:01 AM
பகிர்:

ஆம்பூரில் வேலூர் மேற்கு மாவட்ட திமுகவின் விவசாயத் தொழிலாளர் அணியும், மாவட்ட ஆதிதிராவிட குழு சார்பில், மறைந்த திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதிக்கு புகழஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில், வேலூர் மேற்கு மாவட்ட திமுக விவசாயத் தொழிலாளர் அணி அமைப்பாளர் வீராங்குப்பம் பழனி, மாவட்ட ஆதிதிராவிட குழு அமைப்பாளர் எல்.மாங்குப்பம் குமார் ஆகியோர் வரவேற்றனர்.  
பேராசிரியர் அப்துல் காதர், தலைமைப் பேச்சாளர்கள் கரிகாலன்,  சரத்பாலா ஆகியோர் கருணாநிதியின் அரசியல், இலக்கியம், சமூகப் பணிகள் குறித்து பேசினர்.
நிகழ்ச்சியில், வேலூர் மேற்கு மாவட்டச் செயலாளர் முத்தமிழ் செல்வி, மத்திய மாவட்டச் செயலாளர் நந்தகுமார், திருப்பத்தூர் எம்எல்ஏ நல்லதம்பி, முன்னாள் மாவட்டச் செயலாளர் தேவராஜ், முன்னாள் எம்எல்ஏக்கள் கோவிந்தன், சின்னசாமி, மாவட்ட அவைத் தலைவர் முனிவேல், ஆர்.எஸ்.ஆனந்தன், சம்பத்குமார், ஷர்மிளா, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் வடிவேல், மாவட்ட  மகளிர் அணி அமைப்பாளர் கவிதா, மாவட்ட மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர் உமா, ஆம்பூர் நகரச் செயலாளர் ஆறுமுகம், ஒன்றியச் செயலாளர்கள் அ.செ.வில்வநாதன், அகரம்சேரி சுரேஷ்குமார், பொகளூர் ஜனார்தனன், ஆலாங்காயம் அசோகன், கந்திலி அன்பழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.