வேலூர்

ரயிலில் கடத்த முயன்ற ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல்

DIN

ஆந்திரத்துக்கு  ரயிலில் கடத்த முயன்ற 1 டன் ரேஷன் அரிசியை வருவாய்த் துறையினர் பறிமுதல் செய்தனர். 
ஆட்சியர் எஸ்.ஏ. ராமன் உத்தரவின் பேரில் மாவட்ட வழங்கல் அலுவலர் ஜெய்க்குமார் மேற்பார்வையில் வாணியம்பாடி வட்ட வழங்கல் அலுவலர் கண்ணன் மற்றும் வருவாய்த் துறையினர் சனிக்கிழமை வாணியம்பாடி, கேத்தாண்டப்பட்டி ஆகிய ரயில் நிலையங்கள் அருகே ரேஷன் அரிசி கடத்தல் தடுப்பு சோதனையில் ஈடுபட்டனர். 
அப்போது, அப்பகுதிகளில் உள்ள முட்புதர்களில் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. அங்கிருந்த ஒரு டன் ரேஷன் அரிசி மூட்டைகளைக் கைப்பற்றினர். விசாரணையில், ஆந்திரத்துக்கு ரயில் மூலம் கடத்துவதற்காக முட்புதரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட ஒரு டன் ரேஷன் அரிசியை திருப்பத்தூர் நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீன நெடுஞ்சாலை உடைப்பு: துரிதமாக செயல்பட்ட டிரக் ஓட்டுநருக்கு பாராட்டு

இந்தியன் - 2 வெளியீட்டில் மாற்றம்?

நிஜ்ஜார் கொலையில் மூவர் கைது: பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உடன் தொடர்பு?

”மன்னாதி மன்னன் போல வாழ்க்கை” -பிரதமர் மோடியை விமர்சித்த பிரியங்கா காந்தி

பல கேள்விகளுக்கு பதில் கூற நேரமெடுக்கும்: ஹார்திக் பாண்டியா

SCROLL FOR NEXT