வேலூர்

உடல் நலக்குறைவு: திருமுருகன்காந்திக்கு மருத்துவப் பரிசோதனை

DIN

வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள திருமுருகன்காந்திக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து, அவர் மருத்துவப் பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு திங்கள்கிழமை அழைத்துச் செல்லப்பட்டார்.
 சென்னை ராயபுரத்தில் அனுமதியின்றி ஊர்வலம் நடத்தியதுடன், கலவரம் ஏற்படுத்தும் விதமாக பேசியதாக, மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன்காந்தி கைது செய்யப்பட்டு, வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த ஒரு மாதமாக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் அவருக்கு, கடந்த இரு நாள்களாக வயிற்றுப்போக்கு, மூச்சுத் திணறல் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக, சிறை மருத்துவர்கள் திருமுருகன்காந்திக்கு சிகிச்சை அளித்துள்ளனர். எனினும், அவருக்கு வயிற்றுப்போக்கு குணமாகவில்லை எனத் தெரிகிறது.
 இந்நிலையில், திருமுருகன்காந்திக்கு ஞாயிற்றுக்கிழமை கடுமையான வயிற்றுவலி, வாந்தி ஏற்பட்டுள்ளது. அவரைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவருக்கு அல்சர் ஏற்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளனர். மேலும், மருத்துவப் பரிசோதனைக்காக அவரை அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவும் பரிந்துரை செய்துள்ளனர். 
 இதையடுத்து, திருமுருகன்காந்தியை வேலூர் போக்குவரத்துக் காவல் ஆய்வாளர் மணி தலைமையிலான போலீஸார் திங்கள்கிழமை காலை அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு ரத்தப் பரிசோதனை, ஸ்கேன் செய்யப்பட்டது. மருத்துவப் பரிசோதனைகள் முடிந்து, மதியம் ஒரு மணியளவில் திருமுருகன்காந்தி மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். 
இதனிடையே, மருத்துவமனையில் இருந்து வெளியே வந்த திருமுருகன்காந்தி செய்தியாளர்களிடம் கூறுகையில், சிறையில் தன்னை தனிமைப்படுத்தியுள்ளனர். நான் யாரிடமும் பேசுவதற்கு அனுமதிக்கப்படுவதில்லை என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: புதுச்சேரியில் 4, 817 போ் எழுதினா்

பெண்ணிடம் 5 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு

கஞ்சா, போதை மாத்திரைகள் விற்பனை: 4 போ் கைது

நீட் தோ்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 4,855 போ் எழுதினா்

வீட்டினுள் இளைப்பாறிய புள்ளி மான்!

SCROLL FOR NEXT