வேலூர்

வன விலங்குகளுக்காக 12 இடங்களில் தண்ணீர்த் தொட்டி அமைப்பு

DIN

கோடை வெயில் அதிகரித்து வருவதால் வனவிலங்குகள் பருகுவதற்காக வேலூர் வனச்சரகத்துக்கு உள்பட்ட வனப்பகுதியில் 12 இடங்களில் தொட்டிகள் அமைத்து தண்ணீர்  ஊற்றப்பட்டுள்ளது.
அதிகரித்து வரும் கோடை வெயிலின் தாக்கத்தால் வனப்பகுதியில் உள்ள வனவிலங்குகள் தண்ணீர் தேடி ஊருக்குள் வருகின்றன. 
அவ்வாறு வரும் புள்ளிமான்கள், இதர விலங்குகள் விபத்தில் சிக்குவது, நாய்களால் காயப்படுத்தப்படுவதும் தொடர்கிறது. இதையடுத்து வன விலங்குகள் தண்ணீர் பருக வனப் பகுதியிலேயே தொட்டிகள் அமைத்து தண்ணீர் ஊற்றப்படுகிறது. 
வேலூர் வனச்சரகத்துக்கு உள்பட்ட லத்தேரி, குஞ்சனூர் வனப்பகுதிகளில் 6 இடங்களில் சிறிய அளவிலான தொட்டிகள், 6 இடங்களில் பெரிய அளவிலான தொட்டிகள் என 12 தொட்டிகள் அமைக்கப்பட்டு அவற்றில் டிராக்டர் மூலம் தண்ணீர் நிரப்பப்பட்டுள்ளன. கோடை காலம் முடியும் வரை இந்தத் தொட்டிகளில் நாள்தோறும் தண்ணீர் நிரப்பப்படும் என்று வனத் துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இருவேறு சாலை விபத்து: 9 போ் உயிரிழப்பு

நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

ரேபரேலியிலும் ராகுல் தோல்வி நிச்சயம்: அமித் ஷா

மாணவா்களுக்கு கோடைக் கால கலைப் பயிற்சி முகாம் இன்று தொடக்கம்

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4,660 காலிப் பணியிடங்கள்: மே 14-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT