வேலூர்

பறக்கும் படை சோதனை: வங்கிப் பணம் ரூ. 32 லட்சம் பறிமுதல்

காட்பாடி அருகே புதன்கிழமை இரவு நடத்தப்பட்ட தேர்தல் பறக்கும் படை சோதனையில் வங்கி ஏஜென்சி வேனில்

DIN

காட்பாடி அருகே புதன்கிழமை இரவு நடத்தப்பட்ட தேர்தல் பறக்கும் படை சோதனையில் வங்கி ஏஜென்சி வேனில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 32 லட்சம் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
வேலூரை அடுத்த காட்பாடியில் இருந்து கார்னாம்பட்டு செல்லும் சாலையில், பறக்கும் படையினர் 10-ஆம் தேதி இரவு தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த வங்கி ஏஜென்சி வேனை சோதனை செய்தனர். வேனில் கட்டுக்கட்டாக ரூ. 71 லட்சம் இருந்தது. அவற்றில், எஸ்பிஐ வங்கிக்குச் சொந்தமான ரூ. 22 லட்சம், சிட்டி யூனியன் வங்கிக்குச் சொந்தமான ரூ. 15 லட்சம், ஆக்ஸிஸ் வங்கிக்கு கொண்டு செல்லப்பட்ட எல்ஐசி-க்குச் சொந்தமான ரூ. 2 லட்சம் என மொத்தம் ரூ. 39 லட்சத்துக்கு உரிய ஆவணங்கள் இருந்தன.
ஆனால், கரூர் வைஸ்யா வங்கிக்குச் சொந்தமான ரூ. 32 லட்சத்துக்கு உரிய ஆவணங்கள் இல்லாததால், அந்தப் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். வருமான வரித் துறை சோதனைக்குப் பிறகு, வருவாய்த் துறை அதிகாரிகள் மூலம் அந்தப் பணம் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இப்படியும் ஒரு பிக்கப்! வசூலில் ஆச்சரியப்படுத்தும் துரந்தர்!

இந்தியா vs தென்னாப்பிரிக்கா! திருவனந்தபுரத்தில் நடத்தலாம்: சசி தரூர்

ஈரோடு பிரசாரத்தில் தவெக தலைவர் விஜய்!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 4

எல்பிஜி துறையில் 30 ஆண்டுகள்! தென்னிந்தியாவில் வலுவடையும் சூப்பர்கேஸ் நிறுவனம்!

SCROLL FOR NEXT