வேலூர்

"பார்வையற்றவர்கள் வாக்களிக்க ஒருவரை துணைக்கு அழைத்துச் செல்லலாம்'

DIN

பார்வையற்றவர்கள் வாக்களிப்பதற்கு ஒருவரை துணைக்கு அழைத்துச் செல்லலாம் என்று தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
வேலூர் மக்களவைத் தேர்தல் திங்கள்கிழமை நடைபெற உள்ளது. இத்தொகுதியில் மொத்தமுள்ள 14,32,555 வாக்காளர்களில் 6,590 பேர் மாற்றுத் திறனாளிகளாவர். இவர்கள் எளிதாகச் சென்று வாக்களிக்க வசதியாக அனைத்து வாக்குச் சாவடிகளிலும் சாய்தள நடைப்பாதை அமைக்கப்பட்டுள்ளதுடன், இருசக்கர நாற்காலியும் வழங்கப்பட்டுள்ளன. 
இந்நிலையில், பார்வையற்ற வாக்காளர்கள், யாரேனும் ஒருவரை துணைக்கு அழைத்துச் சென்று வாக்களிக்கலாம். ஒரு குடும்பத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட பார்வையற்றவர்கள் இருந்தால் ஒவ்வொருவருக்கும் தனித்தனி உதவியாளர்கள் வரவேண்டும். அவ்வாறு வருவோர் தேர்தல் மைய அதிகாரியிடம் அனுமதி பெற வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனவு இதுவோ..!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

அடுத்த 5 ஆண்டுகளில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ அமல்படுத்தப்படும்: ராஜ்நாத் சிங்

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

SCROLL FOR NEXT