வேலூர்

கிணற்றில் மிதந்த புகையிலை பொருள்கள் பறிமுதல்

DIN

குடியாத்தம் அருகே கிணற்றில் மிதந்த சுமார் ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள புகையிலைப் பொருள்களை தீயணைப்புப் படையினர் பறிமுதல் செய்தனர்.
நெட்டேரி கிராமத்தில் உள்ள குப்பம்மாளின் விவசாயக் கிணற்றில் மூட்டை மிதப்பதாக அப்பகுதி மக்கள் தீயணைப்புப் படையினருக்கு புதன்கிழமை தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் நிலைய அலுவலர் சரவணன் தலைமையில் அங்கு சென்ற தீயணைப்புப் படையினர் கிணற்றில் இறங்கி மூட்டையை மீட்டு வந்து அதைத் திறந்து பார்த்தனர்.
அதில், தடை செய்யப்பட்ட குட்கா, ஹான்ஸ், பான்மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருள்கள் இருந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு சுமார் ரூ. 50 ஆயிரம் இருக்கும் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து குடியாத்தம் நகர போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அணிவகுத்து நின்ற வாகனங்கள்...

வருங்கால வைப்பு நிதி குறை தீா்க்கும் முகாம்

மும்பை விமான நிலையத்தில் 21 கிலோ தங்கம் பறிமுதல்!

ஹெலிகாப்டர் விபத்திலிருந்து உயிர்தப்பிய அமித் ஷா? என்ன நடந்தது?

தமிழகத்தில் ரூ.1,309 கோடி பறிமுதல்!: தேர்தல் ஆணையம்

SCROLL FOR NEXT