முகப்பு
வேலூர்

காவிரி கூட்டுக் குடிநீர் திட்ட குழாய் உடைப்பால் வீணாகும் நீர்

நாட்டறம்பள்ளியில் காவிரி கூட்டுக் குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

Updated On : 14 பிப்ரவரி 2019, 1:26 am IST
பகிர்:

நாட்டறம்பள்ளியில் காவிரி கூட்டுக் குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
நாட்டறம்பள்ளி பேரூராட்சிக்கு காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் ஜோலார்பேட்டை வழியாக நாட்டறம்பள்ளி சந்தை பனந்தோப்பு பகுதிக்கு குழாய் மூலம் நீர் எடுத்து வரப்படுகிறது. அதைத் தொடர்ந்து ஆங்காங்கே உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளில் ஏற்றப்பட்டு பொதுமக்களுக்கு குடிநீர் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சந்தை பனந்தோப்பு பகுதியில் தரைதள நீர்தேக்கத்தொட்டி அருகே கடந்த சில தினங்களுக்கு முன் குழாய் உடைந்து அதில் இருந்து நீர் பெருமளவு வெளியேறி வருகிறது.
இதுகுறித்து அப்பகுதியினர் பேருராட்சி நிர்வாகத்துக்கும், பம்ப்
ஆப்பரேட்டர் மூலம் அதிகாரிகளுக்கு பலமுறை புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையென கிராமத்தினர் புகார் கூறுகின்றனர்.
துணி துவைக்க பயன்பாடு: திறந்தவெளியில் வெளியேறி தேங்கி நிற்கும் நீரை அவசரத் தேவைக்கு குடங்களில் பிடித்துச் செல்வதோடு, பலர் அங்கே துணி துவைக்க அந்த நீரை பயன்படுத்தி வருகின்றனர்.
நீர் பெருமளவு தேங்கி வருவதால் அப்பகுதியில் சுகாதாரச் சீர்கேடும் ஏற்படத் தொடங்கியுள்ளது. இது தொடர்பாக உடனடியாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதுகுறித்து பேரூராட்சி அலுவலர்கள் கூறியது:  குழாய் உடைந்து பல வாரங்களாக குடிநீர் வீணாகி வருவது குறித்து காவிரி கூட்டு குடிநீர் திட்டப் பணிகளை மேற்கொண்டு வரும் தனியார் நிறுவன அதிகாரிகளுக்கு பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.