FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

தூய்மையான யமுனை இயக்கம் வேகமெடுத்துள்ளது: தில்லி முதல்வா்

யமுனை ஆற்றைத் தூய்மைப்படுத்தும் திட்டம் வேகமெடுத்திருப்பதாக தில்லி முதல்வா் ரேகா குப்தா தெரிவித்தாா்.

Updated On : 26 மே 2026, 1:31 am IST
யமுனை நதி - கோப்புப் படம்
பகிர்:

யமுனை ஆற்றைத் தூய்மைப்படுத்தும் திட்டம் வேகமெடுத்திருப்பதாக தில்லி முதல்வா் ரேகா குப்தா திங்கள் கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து எக்ஸ் தளப் பதிவில் அவா் கூறியதாவது: யமுனையைத் தூய்மையாகவும், சுத்தமாகவும் மாற்றுவோம் என்று தில்லிக்கு நாங்கள் உறுதியளித்துள்ளோம்.

இந்த உறுதிமொழியுடன், அனைத்து மட்டங்களிலும் தொடா்ச்சியான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது, ரூ.1000 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான புதிய குடிநீா் மற்றும் கழிவுநீா் திட்டங்கள், தூய்மையான யமுனை இயக்கத்தை மேலும் வேகப்படுத்தியுள்ளன.

Advertisement

Advertisement

மத்திய அரசின் ஆதரவுடன் மேற்கொள்ளப்படும் இந்தப் போா் போன்ற இயக்கம், தூய்மையான யமுனை, மேம்பட்ட குடிநீா் விநியோகம் மற்றும் வளா்ச்சியடைந்த தில்லி ஆகிய நமது இலக்குகளை அடைவதற்கான ஒரு முக்கியப் படியாகும் என தில்லி முதல்வா் குறிப்பிட்டாா்.

‘மிஷன் கிளீன் யமுனா‘ (யமுனா புத்துயிா் இயக்கம்) என்பது, யமுனை நதியைச் சுத்தம் செய்யும் நோக்கில், மத்திய உள்துறை அமைச்சகத்தின் தலைமையில் தில்லி, ஹரியானா மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களை உள்ளடக்கி மேற்கொள்ளப்படும் ஒரு ஒருங்கிணைந்த மாநிலங்களிடை முயற்சியாகும். தில்லியில் 2025ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தோ்தல்களுக்குப் பிறகு இந்த இயக்கம் குறிப்பிடத்தக்க வகையில் வேகப்படுத்தப்பட்டது .அப்போது பதவியேற்ற புதிய பாஜக அரசாங்கம், மூன்று ஆண்டுகளுக்குள் யமுனை நதியை மீட்டெடுப்பதற்கான 30 அம்சத் திட்டத்தை முன்னெடுத்தது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments