வேலூர்

ரயிலில் அடிபட்டு இளைஞர் சாவு

DIN

குடியாத்தம் அருகே தண்டவாளத்தைக் கடக்க முயன்ற வாலிபர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தார்.
 குடியாத்தம் ரயில் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை சுமார் 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் தண்டவாளத்தைக் கடக்க முயன்றார். அப்போது காட்பாடியிலிருந்து ஜோலார்பேட்டை நோக்கி வந்த ரயிலில் சிக்கி அவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
 இதுகுறித்து குடியாத்தம் ரயில் நிலைய அதிகாரி தில்குஷ் குமார் சிங், ஜோலார்பேட்டை ரயில்வே போலீஸாருக்கு தகவல் அளித்தார்.
 அதன்பேரில் நிகழ்விடத்துக்கு வந்த போலீஸார், அந்த இளைஞரின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
 இறந்த அந்த இளைஞர் பச்சை, வெள்ளை நிறம் கலந்த டி-ஷர்ட்டும், நீல நிற லுங்கியும் அணிந்திருந்தார். அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. இது
 குறித்து ஜோலார்பேட்டை ரயில்வே போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

25 ஆண்டுகளுக்குப் பின் காந்தி குடும்பம் போட்டியிடாத அமேதி! ஸ்மிருதி இராணி கருத்து

யாரோ இவர் யாரோ? அந்த ஓவியாவேதான்...

பிங்க் ரோஸ்...ஸ்ரீதேவி

சிசோடியா ஜாமீன் மனு: சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு!

‘ஆவேஷம்’ பட டிரெண்டிங்கில் இணைந்த பாட் கம்மின்ஸ்!

SCROLL FOR NEXT