வேலூர்

திருக்குறள் எழுதும் போட்டி: வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு

DIN

நெமிலி வட்டார அளவிலான திருக்குறள் எழுதும் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
மத்திய அரசின் நேரு யுவகேந்திரா அமைப்பினர் மற்றும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இளைஞர் நற்பணி மன்றத்தினர் இணைந்து நெமிலி வட்டார அளவிலான திருக்குறள் எழுதும் போட்டிகளை தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் அளவில் அண்மையில் நடத்தினர். இப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழா அசநெல்லிகுப்பம் ஊராட்சி அலுவலகம் அருகே புதன்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இளைஞர் நற்பணி மன்றத்தின் தலைவர் சு. அன்பரசன் தலைமை வகித்தார். இதில், நெமிலி வட்டாரக் கல்வி அலுவலர் ஜி.சம்பத்குமார் பங்கேற்று போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். 
நிகழ்ச்சியில் நேரு யுவகேந்திராவின் மாவட்ட இளைஞர் ஒருங்கிணைப்பாளர் ஏ.ஆர்.விஜயாராவ், அரக்கோணம் டிஎஸ்பி துரைபாண்டியன், இந்தியன் வங்கி நெமிலி கிளை மேலாளர் எஸ்.ஜெயராமன், அசநெல்லிகுப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் மகேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸின் எக்ஸ் தளப் பக்கம் முடக்கம்

பாலியல் புகாரில் சிக்கிய ரேவண்ணாவின் பாஸ்போர்ட்டை முடக்க பிரதமரிடம் சித்தராமையா வலியுறுத்தல்

கண்களா, ஓவியமா...!

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கையாள புதிய நெறிமுறைகள் வெளியீடு

இஸ்ரேலுக்கு எதிரான வழக்கு: தென்னாப்பிரிக்காவுடன் இணையும் துருக்கி!

SCROLL FOR NEXT