அரசுக் கல்லூரியில் கருத்தரங்கம்
குடியாத்தம் அரசினர் திருமகள் ஆலைக் கல்லூரியில் கற்றல், கற்பித்தல், திறன்மேம்படுத்துதல் குறித்த கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
குடியாத்தம் அரசினர் திருமகள் ஆலைக் கல்லூரியில் கற்றல், கற்பித்தல், திறன்மேம்படுத்துதல் குறித்த கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வர் எஸ்.காவேரியம்மாள் தலைமை வகித்தார். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் எஸ்.கருணாநிதி வரவேற்றார். நாமக்கல் அரசுக் கல்லூரி முதல்வர் என்.சி.சந்திரசேகர், கல்வியியல் கல்லூரிப் பேராசிரியர் எஸ்.கிள்ளிவளவன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
கருத்தரங்கில் 42 கல்லூரிகளைச் சேர்ந்த 162 மாணவர்கள் பங்கேற்றனர். ஆய்வாளர்கள் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்தனர்.
நிகழ்ச்சியில் பேராசிரியர்கள் டி.கௌதமன், அ.மலர், டி.ராமசாமி, ஏ.ரமேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.