இன்றைய செய்திகள் மே 26 - நேரலை!
முக்கிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள இணைந்திருங்கள்.
பெங்களூரு அபார வெற்றி..! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது
சித்தராமையா ராஜிநாமா செய்ய காங்கிரஸ் மேலிடம் அழுத்தம்?
சித்தராமையாவுக்கு தேசிய அரசியலில் பொறுப்பு - மாநிலங்களவை உறுப்பினராகிறார்?
விருதுநகரில் 23 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட உத்தரவு!
விருதுநகர் மாவட்டத்தில் விதிமீறல்களுடன் செயல்பட்டு வந்த 23 கல்குவாரிகளை தற்காலிகமாக நிறுத்த இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டாக்டர் டி.கே.பிரபு உத்தரவிட்டுள்ளார்.
தென்காசி மாவட்டத்தில் வந்த புகார்களின் அடிப்படையில் ஆய்வு செய்து நேற்று 18 கல்குவாரிகளை உத்தரவிட்டிருந்த நிலையில், இன்று விருதுநகரில் 23 கல்குவாரிகளை மூட உத்தரவிட்டுள்ளார்.
Advertisement
Advertisement
தமிழகத்தில் 10 இடங்களில் சதமடித்த வெய்யில்!
தமிழ்நாட்டில் இன்று 10 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெப்பம் பதிவானதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
‘க்வாட்’ கூட்டமைப்பு வெளியுறவு அமைச்சா்கள் கூட்டம்: சீனா எதிர்வினை!
அம்பாசமுத்திரம் தொகுதி காலியானதாக அறிவிப்பு! 5 இடங்களுக்கு விரைவில் இடைத்தேர்தல்?
அதிமுக எம்.எல்.ஏ.வாக இருந்த இசக்கி சுப்பையா ராஜிநாமா செய்ததைத் தொடர்ந்து, அம்பாசமுத்திரம் தொகுதி காலியானதாக செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது.
உசிலம்பட்டி: மின்னல் பாய்ந்து கூலித் தொழிலாளிகள் 3 பேர் பலி!
ஜூன் முதல் வாரத்தில் கேரள நிதி நிலைமை குறித்த வெள்ளை அறிக்கை: முதல்வர்
கேரளத்தின் நிதி நிலைமை குறித்த வெள்ளை அறிக்கையை வரும் ஜூன் முதல் வாரம் வெளியிடப்போவதாக அந்த மாநில முதல்வர் வி.டி. சதீசன் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.
அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன்
அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தவெகவில் இணைவதால், தமிழக வெற்றிக் கழகத்தின் நம்பகத்தன்மை கெடும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் இன்று (மே 26) தெரிவித்தார்.
தொகுதி நலனுக்காக தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம்
தொகுதி நலனுக்காக தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம்
தொகுதி மக்களின் நலனுக்காக அம்பாசமுத்திரம் அதிமுக எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்து தவெகவில் இணைந்ததாக இசக்கி சுப்பையா விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை பனையூரில் இது தொடர்பாக செய்தியாளர்களுடன் இசக்கி சுப்பையா பேசியதாவது: கடந்த 5 ஆண்டுகளில் எதனையுமே செய்யவில்லை. ஆளும் கட்சியாக இருந்தால் மட்டுமே மக்களுக்கு நல்லது செய்ய முடியும். அதனால், தொகுதி மக்களின் நலனுக்காக தவெகவில் இணைந்துள்ளேன். எனக் குறிப்பிட்டார்.
அதிமுக எம்.எல்.ஏக்கள் தவெகவில்... ஆரோக்கியமான அரசியலுக்கு ஏற்புடையதல்ல: சிபிஎம் விமர்சனம்!
அதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜிநாமா செய்து, தவெகவில் இணைவது ஆரோக்கியமான அரசியலுக்கு ஏற்புடையதல்ல என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செவ்வாய்க்கிழமை விமர்சித்துள்ளது.
மன்னிப்புக் கோரினார் போப் லியோ
அடிமை வணிகத்தை சட்டப்பூர்வமாக்கியதில் வாடிகனே பங்காற்றியதற்காகவும், பல நூற்றாண்டுகளாக இதைக் கண்டிக்கத் தவறியதற்காகவும் மன்னிப்புக் கோருவதாக போப் பதினான்காம் லியோ திங்கள்கிழமை தெரிவித்தார்.
சிறப்பு ரயில்
திருச்செந்தூர் கோயில் வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு முன்பதிவில்லா சிறப்பு ரயில் சேவையை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!
தமிழகத்தில் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!
வீட்டிலிருந்தே வேலை; தேவையற்ற பயணங்கள் தவிர்ப்பு: ஊழியர்களுக்கு மாருதி சுசுகி அறிவுறுத்தல்!
உலகின் முன்னணி கார் நிறுவனமான மாருதி சுசுகி, இயன்றவரை வீட்டிலிருந்தே வேலை, வெளிநாடுகளுக்கான பயணங்கள் தவிர்ப்பு போன்ற முக்கிய அறிவிப்புகளை அதன் ஊழியர்களுக்கு செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ளது.
இரவு 7 மணி வரை 13 மாவட்டங்களில் மழை!
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்துக்கு (இரவு 7 மணி வரை) சென்னை, தருமபுரி, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், மதுரை, ராணிப்பேட்டை, சேலம், தேனி, திருவள்ளூர், தூத்துக்குடி, திருப்பத்தூர், வேலூர் மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
7,000mAh பேட்டரி உடன் அறிமுகமான ஓப்போ ஏ6சி!
ஓப்போ நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் ஏ6சி இந்தியாவில் இன்று (மே 26) அறிமுகமானது.
7,000mAh பேட்டரி திறன், 120Hz தொடுதிரை, இரட்டை கேமரா, அதீத நினைவகம் போன்றவை இதன் சிறப்புகளாக பார்க்கப்படுகின்றன.
மோடி அரசின் மீது மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர்: கார்கே
எரிபொருள் விலையுயர்வால் மத்திய அரசின் மீது அனைத்துத் தரப்பு மக்களும் கடும் கோபத்தில் உள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.
தமிழ்நாட்டின் புதிய டிஜிபி யார்? 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!
தமிழ்நாட்டின் புதிய டிஜிபி நியமனம் தொடர்பாக 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல் அளித்துள்ளது.
மேக்கேதாட்டு அணை பூமிபூஜை: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!
கர்நாடக அரசால் காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கேதாட்டு அணை தொடர்பாக உத்தேசிக்கப்பட்டுள்ள பூமிபூஜை நிகழ்வைத் தொடர்ந்து, தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்டிடவும், விவசாயிகளின் நலனைக் காத்திடவும், முதல்வர் சி. ஜோசப் விஜய் இன்று (மே 26) இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
தில்லி முதல்வர் ரேகா குப்தாவின் நாற்காலி வைரலாவது ஏன்? விலை என்ன?
தில்லி முதல்வர் ரேகா குப்தாவின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் பதிவிக்கப்பட்டிருக்கும் ஒரே ஒரு புகைப்படம் பல்வேறு விமர்சனங்களை எழுப்பியிருக்கிறது. காரணம், அவர் அமர்ந்திருக்கும் நாற்காலிதான்.
சிபிஎஸ்இ தளத்தில் பயங்கர குளறுபடிகள்
சிபிஎஸ்இ அதிகாரப்பூர்வ இணையதளம் ஹேக் செய்யப்பட்டிருக்கலாம் என்று சென்னை ஐஐடி இயக்குநர் வி. காமகோடி தெரிவித்திருக்கும் நிலையில், சிபிஎஸ்இ தளம் பாதுகாப்பற்று இருப்பதாக மாணவர் ஏற்கனவே அனுப்பிய மின்னஞ்சல் அதிர்ச்சியளித்திருக்கிறது.
கடும் வெய்யிலில் ரூ.500-க்காக மாமியாரை முதுகில் சுமந்து சென்ற பழங்குடியின பெண்! ஏன்?
கடும் வெய்யிலில், 90 வயதான தன்னுடைய மாமியாரை, பழங்குடியினப் பெண் ஒருவர் 4 கி.மீ. க்கு முதுகில் சுமந்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்து அப்பெண்ணிடம் கேட்டதற்கு, அவர் கண்ணீருடன் அளித்த பதில் கேட்பவர்களை பதற வைத்தது.
மே 30 வரை வெய்யில் கொளுத்தும்!
தமிழ்நாட்டில் மே 30 வரை 3 டிகிரி செல்சியஸ் வரை வெய்யில் அதிகரிக்கும், அதேசமயம் இன்று 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நார்வே செஸ்: உலக சாம்பியனை வீழ்த்திய இந்தியாவின் திவ்யா தேஷ்முக்!
நார்வே செஸ் தொடரில் இந்தியாவின் திவ்யா தேஷ்முக் உலக செஸ் சாம்பியனைத் தோற்கடித்தார்.
முதல்வர் விஜய் நாளை தில்லி செல்கிறார்! மோடி, ராகுலுடன் சந்திப்பு!
தமிழ்நாடு முதல்வர் சி. ஜோசப் விஜய் புதன்கிழமை தில்லி பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
லீடர் ஓடிடி தேதி! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
நடிகர் லெஜண்ட் சரவணன் நடிப்பில் வெளியான லீடர் திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆதார் சேவை மையங்களுக்குச் செல்ல முன்பதிவு செய்யலாம்! எப்படி?
ஆதார் அட்டையில் இருக்கும் எழுத்துப் பிழைகள், இனிஷியல் மாற்றம், முகவரி போன்றவற்றை மாற்ற ஆதார் சேவை மையங்களுக்குச் செல்வோர், அங்கு பல மணி நேரம் காத்திருக்கத் தேவையில்லை.
மாமூல் விவகாரம்: தவெக நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம்!
செங்கல்சூளை உரிமையாளர்களிடம் மாமூல் கேட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்த நிலையில், தவெகவில் இருந்து ஒன்றியச் செயலர் விஜயகுமார் நீக்கப்பட்டுள்ளார்.
மேலும் ஒரு அதிமுக எம்எல்ஏ ராஜிநாமா?
அதிமுக எம்எல்ஏ-க்கள் 3 பேர் நேற்று ராஜிநாமா செய்து தவெகவில் இணைந்த நிலையில் அம்பாசமுத்திரம் தொகுதி அதிமுக எம்எல்ஏ இசக்கி சுப்பையா ராஜிநாமா செய்யவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பெட்ரோல், டீசல் விலை 5-வது முறையாக உயர்வு! வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!!
கடந்த இரண்டு வாரங்களில் பெட்ரோல், டீசல் விலை 5-வது முறையாக உயர்த்தப்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.