தவெகவில் இணைகிறார் அதிமுக முன்னாள் அமைச்சர் செம்மலை!
அதிமுக முன்னாள் அமைச்சர் செம்மலை தவெகவில் இணையவுள்ளது பற்றி...
தமிழ்நாடு முதல்வர் விஜய் முன்னிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செம்மலை இன்று தவெகவில் இணையவுள்ளார்.
அதிமுக மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான செம்மலை, 4 முறை சட்டப்பேரவை உறுப்பினராகவும், ஒரு முறை மக்களவை உறுப்பினராகவும் இருந்தவர்.
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலுக்கு பின்னர் அதிமுக இரண்டாக பிளவுபட்டபோது, அதிமுகவில் நடக்கும் தொடர் நிகழ்வுகள் தனக்கு மிகுந்த மன வேதனையை ஏற்படுத்தியதாகக் கூறி அக்கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.
Advertisement
Advertisement
மேலும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு கட்சியில் தனக்கான வாய்ப்புகள் மற்றும் உரிய மரியாதை குறைந்துவிட்டதாக அவர் தெரிவித்தார்.
இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக வெளிநாட்டில் வசித்து வந்த அவர், தற்போது தமிழக வெற்றிக் கழகத்தில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
கடந்த சில நாள்களாக செம்மலையின் மகன் எழில் அமுதன், தவெகவில் இணைவது குறித்து தவெக அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், திருப்பூர் மாவட்டம், தாராபுரம் இடைத்தேர்தல் பிரசாரத்துக்காக இன்று வருகை தரும் முதல்வர் விஜய் முன்னிலையில், அதிமுகவில் செம்மலை இணையவுள்ளார்.
இதற்காக தாராபுரத்தில் பொதுக்கூட்டம் நடைபெறும் அரங்குக்கு செம்மலை வந்துள்ளார்.
Former AIADMK minister Chemmalai joins TVK!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.