வேலூர்

திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினர்

வாணியம்பாடியை அடுத்த மதனாஞ்சேரியில் திமுக சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாற்றுக்  கட்சியினர் 100-க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர்.

DIN

வாணியம்பாடியை அடுத்த மதனாஞ்சேரியில் திமுக சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாற்றுக்  கட்சியினர் 100-க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர்.
ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, திமுக இளைஞரணி சார்பில், செவ்வாய்க்கிழமை சமபந்தி விருந்து நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, வேலூர் மேற்கு மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் ஞானவேலன் தலைமை வகித்தார். கரும்பூர், வெங்கடசமுத்திரம், வடசேரி, மேல்குப்பம், சம்மந்திகுப்பம், சிக்கணாங்குப்பம் உள்பட பல்வேறு பகுதிகளிலிருந்து திமுக நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். விழாவில், அதிமுக, தேமுதிக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளிலிருந்து விலகிய 100-க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர். புதிதாக கட்சியில் இணைந்தவர்களை மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஞானவேலன் வரவேற்றார். முன்னதாக, நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் சமபந்தி விருந்து மற்றும் காலண்டர் வழங்கப்பட்டது. நிர்வாகிகள் காசி, ரங்கநாதன், பழனி, பெருமாள், ராஜா உள்ளிட்ட பலர்  கலந்து கொண்டனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இப்படியும் ஒரு பிக்கப்! வசூலில் ஆச்சரியப்படுத்தும் துரந்தர்!

இந்தியா vs தென்னாப்பிரிக்கா! திருவனந்தபுரத்தில் நடத்தலாம்: சசி தரூர்

ஈரோடு பிரசாரத்தில் தவெக தலைவர் விஜய்!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 4

எல்பிஜி துறையில் 30 ஆண்டுகள்! தென்னிந்தியாவில் வலுவடையும் சூப்பர்கேஸ் நிறுவனம்!

SCROLL FOR NEXT