திடக்கழிவு மேலாண்மை கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்
ஆற்காட்டில் திடக்கழிவு மேலாண்மைத் திட்ட கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் புதன்கிழமை போராட்டம் நடத்தினர்.
ஆற்காட்டில் திடக்கழிவு மேலாண்மைத் திட்ட கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் புதன்கிழமை போராட்டம் நடத்தினர்.
ஆற்காடு நகராட்சியில் 3 இடங்களில் கிடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரிக்கும் கிடங்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, இரண்டு இடங்களில் பணிகள் நடைபெற்று வருகின்றன. மூன்றாவது இடமாக ஆற்காடு பூபதி நகர் பகுதியில் புதிதாகக் கிடங்கு அமைக்க முடிவு செய்யப்பட்டது.
அதற்கான கட்டுமானப் பணிக்கு பூமி பூஜை செய்வதற்காக நகராட்சி ஆணையர் ஷகிலா மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு புதன்கிழமை நேரில் சென்றனர். அப்போது அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அங்கு திரண்டனர். "இங்கு குப்பை தரம் பிரிக்கும் கிடங்கை அமைக்கக் கூடாது.
அவ்வாறு அமைத்தால் ஈக்கள், கொசுக்கள் அதிகரித்து சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டு இப்பகுதிவாசிகள் பாதிக்கப்படுவார்கள்' என்று கூறி எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் போராட்டம் நடத்தினர். இதனால் கிடங்கு கட்டுமானப் பணிகள் தற்காலிமாக நிறுத்தப்பட்டன.