முகப்பு
வேலூர்

தொழிலாளியை வெட்டியவர் கைது

வாணியம்பாடி அருகே முன்விரோத தகராறில் தொழிலாளியை கத்தியால் வெட்டியவரை போலீஸார் கைது செய்தனர்.

Updated On : 23 ஜனவரி 2019, 8:39 am IST
பகிர்:

வாணியம்பாடி அருகே முன்விரோத தகராறில் தொழிலாளியை கத்தியால் வெட்டியவரை போலீஸார் கைது செய்தனர்.
வாணியம்பாடியை அடுத்த ஒடப்பேரி கிராமத்தைச் சேர்ந்த தொழிலாளி ராமகிருஷ்ணன் (35). இவர், ஈச்சங்கால் கிராமத்தைச் சேர்ந்த நந்தன் (34) என்பவரின் வீட்டின் அருகே உள்ள இடத்துக்குச் சென்று அடிக்கடி மது அருந்துவாராம். இதுதொடர்பாக இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. 
இந்நிலையில், திங்கள்கிழமை மாலை ராமகிருஷ்ணன் தனது நண்பர்களுடன் இருசக்கர வாகனத்தில் நந்தன் வீடருகே சென்றபோது இருவருக்கும் இடையே ஏற்பட்டு தகராறில் நந்தன் வீட்டிலிருந்த கத்தியால் ராமகிருஷ்ணனை வெட்டினார். இதில் பலத்த காயமைடந்த ராமகிருஷ்ணன் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.  
இதுகுறித்து அம்பலூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து நந்தனை செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.