முகப்பு
வேலூர்

29-இல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

வேலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் ஜன. 29-ஆம் தேதி நடக்க உள்ளது.

Updated On : 23 ஜனவரி 2019, 8:43 am IST
பகிர்:

வேலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் ஜன. 29-ஆம் தேதி நடக்க உள்ளது.
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சார்பில் 
வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் தலைமையில் ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கத்தில் ஜன.29-ஆம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெறும் இக்கூட்டத்தில், பல்வேறு துறை அலுவலர்கள் பங்கேற்று விவசாயிகளின் குறைகள், தேவைகள் குறித்து விவாதிக்க உள்ளனர். கடந்த மாதம் நடைபெற்ற கூட்டத்தில் அளிக்கப்பட்ட மனுக்கள் மீதான நடவடிக்கைகள் குறித்தும் தெரிவிக்கப்பட உள்ளது.
இக்கூட்டத்தில் வேலூர் மாவட்டத்திலுள்ள விவசாயிகள், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்று தங்களது குறைகள், தேவைகளை நேரடியாகவோ, மனுக்கள் மூலமாகவோ தெரிவிக்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.