வேலூர்

திமுக பிரமுகர் வீட்டுக்கு வெளியே வீசப்பட்ட ரூ.27 லட்சம் பறிமுதல்

DIN


வேலூர் அருகே திமுக பிரமுகர் வீட்டுக்கு வெளியே வீசப்பட்ட ரூ.27 லட்சம் ரொக்கப் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் சனிக்கிழமை பறிமுதல் செய்தனர்.
வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இத்தொகுதியில் பறக்கும் படையினர், வருமான வரித்துறை அதிகாரிகள் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், வேலூர், அலமேலுமங்காபுரத்தை அடுத்த புதுவசூர் பகுதியைச் சேர்ந்த மனை வணிக தொழிலதிபரான திமுகவைச் சேர்ந்த ஏழுமலைக்குச் சொந்தமான வீட்டில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
அதன் பேரில், வருமான வரித்துறை அதிகாரிகள் 10 பேரும், தேர்தல் கண்காணிப்புக் குழு அதிகாரிகளும் அந்த வீட்டில் சனிக்கிழமை திடீர் சோதனை  நடத்தினர். அதிகாரிகள் சோதனை நடத்த அங்கு சென்றபோது அந்த வீட்டிலிருந்த ஒருவர் பணக்கட்டு வைக்கப்பட்டிருந்த பையை வீட்டுக்கு வெளியே தூக்கியெறிந்ததாகக் கூறப்படுகிறது.  அதிகாரிகள் அந்தப் பையைப் பறிமுதல் செய்து பார்த்தபோது அதில் ரூ.27.76 லட்சம் ரொக்கம் இருப்பது தெரி யவந்தது. இதுகுறித்து தொழிலதிபர் ஏழுமலையிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப அலை: தமிழகத்துக்கு மே 4 வரை மஞ்சள் எச்சரிக்கை!

வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக நினைவு நாள்: தியாகிகளுக்கு அஞ்சலி!

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

முதல்வர் ஸ்டாலின் மே நாள் வாழ்த்து!

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

SCROLL FOR NEXT