வேலூர்

கழிவுநீர்க் கால்வாயிலிருந்து  பெண் சடலம் மீட்பு

DIN


அரக்கோணத்தில் கழிவுநீர்க் கால்வாயில் இருந்து பெண் சடலம் சனிக்கிழமை மீட்கப்பட்டது.
அரக்கோணம் கிரிபில்ஸ்பேட்டை பஜனை கோயில் தெருவில் கழிவுநீர்க் கால்வாயில் 40 வயது மதிக்கத்தக்க பெண் சடலம் கிடப்பதாக அரக்கோணம் நகர போலீஸாருக்கு சனிக்கிழமை தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸார் அங்கு சென்று சடலத்தை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில், அவர் அதே பகுதியைச் சேர்ந்த ரகுபதியின் மனைவி வள்ளி (45) என்பதும், இவர் சற்று மனநிலம் பாதிக்கப்பட்டவர்  என்பதும் தெரியவந்தது. அரக்கோண் நகர போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

திருக்குறள் முற்றோதல் போட்டியில் வென்ற மாணவிக்கு பாராட்டு

தட்டச்சுப் பள்ளிகள் கேட்கும் தோ்வு மையத்தை ஒதுக்கக் கோரிக்கை

கேரளம், தென் தமிழக கடலோர பகுதிகளுக்கு ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை!

குடிநீா் விநியோகப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT