வேலூர்

ஆதரவு திரட்டிய வேட்பாளர்கள்

DIN

அரக்கோணம் மக்களவைத் தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.கே.மூர்த்தி ஆற்காடு சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் வியாழக்கிழமை ஆதரவு திரட்டினார்.
ஆற்காடு நகரம், ஒன்றியம், திமிரி ஒன்றியம், திமிரி, விளாபாக்கம், கலவை ஆகிய பேரூராட்சி, கணியம்பாடி ஒன்றியப் பகுதிகளில் கூட்டணிக் கட்சியின் நிர்வாகிகளை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டினார். அவரை வேலூர் கிழக்கு மாவட்டச் செயலரும், எம்எல்ஏவுமான சு.ரவி அறிமுகப்படுத்தினார். 
அதிமுக ஆற்காடு நகரச் செயலர் எம்.சங்கர், ஒன்றியச் செயலர்கள், எம்.குட்டி (ஆற்காடு), சொரையூர் குமார்(திமிரி), பாமக மாநில நிர்வாகிகள் க.சரவணன், தேமுதிக மாவட்டச் செயலர் நித்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
திமுக வேட்பாளர்
மாதனூர் ஒன்றியத்தில் ஆம்பூர் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளர் வியாழக்கிழமை சந்தித்து ஆதரவு திரட்டினார்.
மாதனூர் ஒன்றியத்துக்கு உள்பட்ட பாக்கம்பாளையம், மேல்பள்ளிப்பட்டு, அகரம், தோளப்பள்ளி, அக்ராவரம், பள்ளிக்குப்பம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் ஆம்பூர் தொகுதி இடைத்தேர்தல் திமுக வேட்பாளர் அ.செ. வில்வநாதன் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் மற்றும் வாக்காளர்களைச் சந்தித்து ஆதரவு திரட்டினர். மாதனூர் ஒன்றிய திமுக செயலர் ப.ச. சுரேஷ்குமார் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT