வேலூர்

குடியாத்தத்தில் சூறாவளிக் காற்றுடன் மழை

DIN

குடியாத்தம் பகுதியில் புதன்கிழமை இரவு சூறாவளிக் காற்றுடன் பெய்த பலத்த மழையால் வாழை மரங்கள், மின் கம்பங்கள் முறிந்து விழுந்தன. இதில் பசு மாடு இறந்தது.
குடியாத்தம் மற்றும் அதன் சுற்றுப் பகுதியில் புதன்கிழமை மாலை சூறாவளிக் காற்றுடன் பலத்த மழை பெய்தது. அப்போது மோடிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் சந்திரன், தனஞ்செயன், பாபு ஆகியோரின் நிலங்களில் அறுவடைக்குத் தயாராக இருந்த 500-க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து விழுந்தன. 
மேலும், அப்பகுதியில் இருந்த 10-க்கும் மேற்பட்ட மின் கம்பங்களும், பல தென்னை மரங்களும் முறிந்து விழுந்தன. தென்னை மரம் முறிந்து விழுந்ததில் ஆம்பூரான்பட்டியைச் சேர்ந்த விவசாயி வெங்கடேசனின் பசு மாடு இறந்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவில் இணைந்தார் தில்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி

உலகை அள்ளுங்கள், சிவப்பைத் தீட்டுங்கள்! ஜோதிகா...

நெல்லை காங். நிர்வாகி ஜெயக்குமார் உடல் பிரேத பரிசோதனை

தில்லியில் கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு

பாஜகவின் பொய்யான வாக்குறுதிகளால் சலிப்படைந்த மக்கள்: கெலாட்

SCROLL FOR NEXT