வேலூர்

செம்மரக் கடத்தல்: தமிழகத் தொழிலாளி கைது

DIN

திருப்பதியை அடுத்த சேஷாசல வனப் பகுதியில் செம்மரம் வெட்டியதாக தமிழகத் தொழிலாளி ஒருவரை செம்மரக்கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் கைது செய்தனர்.
திருப்பதியை அடுத்த சேஷாசல வனப் பகுதியில் புதன்கிழமை அதிகாலை செம்மரக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் இரு குழுக்களாகப் பிரிந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அப்போது சிலர் செம்மரக்கட்டைகளை சுமந்து செல்வதைக் கண்டு, அவர்களை விரட்டிப் பிடிக்க முயன்றனர். ஆனால் அவர்கள் செம்மரக் கட்டைகளை போட்டு தப்பியோடினர். 
அதில் ஒருவரை மட்டும் போலீஸார் கைது செய்து, 9 செம்மரக் கட்டைகளை பறிமுதல் செய்தனர்.  விசாரணையில், கைது செய்யப்பட்டவர் கல்வராயன் மலையைச் சேர்ந்த வெள்ளையன் (42) என்பது தெரிய வந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகை காந்தள் முருகன் கோயிலில் அமைச்சா் ஆய்வு

உதகை ஜெ.எஸ்.எஸ். மருந்தாக்கியல் கல்லூரியில் முப்பெரும் விழா

கூடலூரில் அலுவலக வாசலில் அமா்ந்து கோரிக்கை மனுக்களைப் பெற்ற எம்எல்ஏ

கடும் வறட்சி: மசினகுடியில் நாட்டு மாடுகள் இறப்பு அதிகரிப்பு

சந்தனக் காப்பில் தட்சிணாமூா்த்தி

SCROLL FOR NEXT