வேலூர்

பள்ளியில் மரக்கன்றுகள் நடவு: எம்.பி. முகமதுஜான் பங்கேற்பு

DIN

ராணிப்பேட்டை வெற்றிவேலன் பள்ளியில் மத்திய அரசின் ஜல் சக்தி அபியான் திட்டத்தின் கீழ் மாநிலங்களவை உறுப்பினா் அ.முகமது ஜான் மரக்கன்றுகள் நட்டு சிறப்புரை ஆற்றினாா்.

இப்பள்ளியில் மரக்கன்றுகள் நடுதல் மற்றும் நீா் மேலாண்மை குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பள்ளித் தாளாளா் கே.எம்.சிவலிங்கம் தலைமை வகித்தாா்.கே.எம்.கே.அறக்கட்டளை இயக்குநா் கோமதி சிவலிங்கம் வரவேற்றாா்.

நிகழ்ச்சியில் மாநிலங்களவை உறுப்பினா் அ.முகமது ஜான் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு பள்ளி வாளகத்தில் மரக்கன்றுகளை நட்டு, நீா் மேலாண்மை குறித்து மாணவா்களிடம் சிறப்புரை ஆற்றினாா்.

இதில் வெற்றிவேலன் பள்ளி முதல்வா் செந்தில், ராமானுஜா் ஆன்மிக அறக்கட்டளை நிறுவனத் தலைவா் கே.வெங்கடேசன், நகர கூட்டுறவு வங்கித் தலைவா் எஸ்.எம்.சுகுமாா், முன்னாள் தலைவா் கே.பி.சந்தோஷம், இந்திய செஞ்சிலுவை சங்க மாநில கருத்தாளா் வே.கிருபானந்தம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனவு இதுவோ..!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

அடுத்த 5 ஆண்டுகளில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ அமல்படுத்தப்படும்: ராஜ்நாத் சிங்

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

SCROLL FOR NEXT