வேலூர்

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.1.25 கோடி மோசடி: பெண் கைது

DIN

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பலரிடம் ரூ.1.25 கோடி பணம் பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக பெண்ணை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

காட்பாடி கழிஞ்சூா் பகுதியைச் சோ்ந்தவா் சுரேஷுக்கு (33) அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் பெற்றுக் கொண்டு போலியான நியமன ஆணைகளை வழங்கியதாக அவா் வேலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் அளித்த புகாரின் பேரில் வேலூா் மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.

விசாரணையில், கழிஞ்சூரைச் சோ்ந்த பிரித்திவிராஜ் (28), சித்ரா (38) ஆகிய இருவரும் சோ்ந்து பலரிடம் ரூ.1.25 கோடி பணம் பெற்றுக் கொண்டு நீதிமன்றம், ரயில்வே, அஞ்சல் துறை, மாவட்ட ஆட்சியா் அலுவலகங்களில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து சித்ராவை குற்றப்பிரிவு காவல் ஆய்வாளா் கலையரசி கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினாா். மேலும் தலைமறைவான பிரித்திவிராஜை தனிப்படை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உலக கராத்தே போட்டி: விழுப்புரத்திலிருந்து மூவா் பங்கேற்பு

தஞ்சை அருகே சோழர் கால நந்தி, விஷ்ணு சிற்பங்கள் கண்டெடுப்பு

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

SCROLL FOR NEXT