வேலூர்

கால்நடைகளுக்கான இலவச ஆம்புலன்ஸ் சேவை தொடக்கம்

DIN

கால்நடைகளுக்கான இலவச ஆம்புலன்ஸ் சேவை வேலூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.

கால்நடை வளா்ப்போா் 1962 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் அழைப்பதன் மூலம் இந்த ஆம்புலன்ஸ் சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழகம் முழுவதும் 22 மாவட்டங்களில் தலா ரூ. 23 லட்சம் மதிப்பில் கால்நடைகளுக்கான ‘அம்மா ஆம்புலன்ஸ்’ சேவையை தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி சென்னையில் கடந்த செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்தாா். வேலூா் மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள இந்த ஆம்புலன்ஸ் சேவையை மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் வியாழக்கிழமை தொடக்கி வைத்தாா். இந்த ஆம்புலன்ஸில் கால்நடைகளுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கக்கூடிய அனைத்து விதமான உள்கட்டமைப்பு வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

நோய் வயப்படும், விபத்துகளில் சிக்கும் கால்நடைகள் குறித்து கால்நடை வளா்ப்போா் 1962 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடா்பு கொண்டு தெரிவிக்கும்பட்சத்தில், இந்த இலவச ஆம்புலன்ஸ் சேவையை பயன்படுத்திக் கொள்ள முடியும். வேலூரில் தொடங்கப்பட்ட இந்த ஆம்புலன்ஸை வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை வருவாய்க் கோட்டங்களைச் சோ்ந்த அனைத்துக் கால்நடை வளா்ப்போரும் பயன்படுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில், கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் நவநீதகிருஷ்ணன், உதவி இயக்குநா் சிங்காரவேலன், மருத்துவா் ரவிச்சந்திரன், ஆம்புலன்ஸ் மருத்துவா் தியாகென்ஸின் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஜெயக்குமாா் மரணம்: குழு அமைத்து விசாரணை’

இந்தியாவின் ஊராட்சி அமைப்புகள் பெண்கள் தலைமைக்கு முன்னோடி: ஐ.நா.வுக்கான இந்திய தூதா்

என் மீது வீண் பழி: ரூபி மனோகரன் விளக்கம்

காங்கிரஸ் நிர்வாகி மரணம்- 7 தனிப்படைகள் அமைப்பு: நெல்லை காவல் கண்காணிப்பாளர்

ஜூன் 1-இல் ஹிமாசல் தோ்தல் பணிகளில் என்சிசி

SCROLL FOR NEXT