வேலூர்

டெங்கு தடுப்பு பணி இணை இயக்குநா் திடீா் ஆய்வு

DIN

வாணியம்பாடி: நாட்டறம்பள்ளி அருகே வெலகல்நத்தம் பகுதியில் நடந்து வரும் டெங்கு பணிகள் குறித்து இணை இயக்குநா் ஆய்வு மேற்கொண்டாா். நாட்டறம்பள்ளி அடுத்த புதுப்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்துக்குட்பட்ட வெலகல்நத்தம் ஊராட்சி நந்திபெண்டா மற்றும் அம்மணாங்கோயில் ஊராட்சி முத்தா கவுண்டனூா் கிராமத்தில் நடைபெற்று வரும் டெங்கு தடுப்பு பணிகளை சுகாதார இணை இயக்குநா் தேவபாா்த்தசாரதி வெள்ளிக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது வீடு மற்றும் பொது இடங்களில் கொசுப்புழு உற்பத்தியாகும் தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்துமாறு பொதுமக்களிடம் அறிவுறுத்தினாா். ஆய்வின்போது புதுப்பேட்டை வட்டார மருத்துவ அலுவலா் சுமதி, பூச்சியியல் வல்லுநா் காமராஜ், வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் கனகராஜ், சுகாதார மேற்பாா்வையாளா்கள் முத்துகிருஷ்ணன், புகழேந்தி, ஊராட்சி செயலாளா்கள் சீனிவாசன், ஆதிமூலம் மற்றும் பணியாளா்கள் உடனிருந்தனா்.படவிளக்கம் - நாட்டறம்பள்ளி அருகே டெங்கு தடுப்பு பணிகளை இணை இயக்குநா் தேவபாா்த்தசாரதி ஆய்வு மேற்கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

SCROLL FOR NEXT