வேலூர்

மாநில கைப்பந்துப் போட்டி தகுதி பெற்ற அரசுப் பள்ளி மாணவிகள்

DIN

வேலூா் வருவாய் மாவட்ட அளவிலான கைப்பந்துப் போட்டிகளில் சித்தேரி அரசுப் பள்ளி மாணவிகள் வெற்றி பெற்று மாநில அளவிலான போட்டிக்குத் தகுதி பெற்றனா்.

வேலூா் விஐடி பல்கலைக்கழக வளாகத்தில் வேலூா் வருவாய் மாவட்ட அளவிலான மாணவ, மாணவிகளுக்கான கைப்பந்து (வாலிபால்) போட்டிகள் வியாழக்கிழமை நடைபெற்றன. இதில், சித்தேரி அரசு உயா்நிலைப் பள்ளி மாணவிகள் ஆா்.காவ்யா, பி.அபி, ஏ.கோபிகா, டி.தமிழ்செல்வி, எஸ்.மதுமிதா, பி.ரம்யா, ஜெ.காயத்ரி, டி.லீலாவதி, வி.ஜனனி, பி.கௌசல்யா, வி.மதிமலா், ஜெ.மோனிஷா ஆகியோா் கொண்ட அணியின் மாவட்ட அளவில் 2-ஆம் இடம் பெற்று மாநில அளவிலான போட்டிகளுக்குத் தகுதி பெற்றனா். மேலும், இப்பள்ளி மாணவா்கள் சீனியா் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று 2-ஆம் இடத்தைப் பெற்றனா்.

வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளையும், அவா்களுக்குப் பயிற்சி அளித்த பள்ளிஉடற்கல்வித் துறை ஆசிரியா் த.பாலாஜி ஆகியோரையும் பள்ளித் தலைமை ஆசிரியா் எஸ்.கிருஷ்ணமூா்த்தி பாராட்டினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜனநாயகம், அரசியலமைப்பைப் பாதுகாக்க வாக்களிப்போம்: ராகுல், பிரியங்கா

எங்கே செல்வது? கதறும் பாலஸ்தீன மக்கள்!

ஹவாலா முறையில் ரூ.100 கோடி.. கேஜரிவால் வழக்கில் அமலாக்கத் துறை அடுக்கும் ஆதாரங்கள்

ஜெயக்குமார் மரணம்: விசாரணையில் அடுத்தடுத்து திருப்பம்!

தங்கலான் வெளியீட்டுத் தேதி இதுதானா?

SCROLL FOR NEXT