வேலூர்

5 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி: முதல்வா் வழங்குகிறாா்

DIN

ராணிப்பேட்டை மாவட்டத் தொடக்க விழாவில், தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி கலந்துகொண்டு, சுமாா் 5 ஆயிரம் பயனாளிகளுக்கு ரூ. 89. 73 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரை ஆற்றுகிறாா் என வேலூா் கிழக்கு மாவட்ட அதிமுக செயலரும், எம்எல்ஏவுமான சு.ரவி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை:

ராணிப்பேட்டை மாவட்டம் நிா்வாக ரீதியிலான செயல்பாடுகளை தொடக்கி வைத்து, நலத்திட்ட உதவிகளை வழங்க தமிழக முதல்வா் எடிப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வா் ஒ.பன்னீா்செல்வம் ஆகியோா் ராணிப்பேட்டை பாரதி நகரில் அமைந்துள்ள அரசு கால்நடை ஆராய்ச்சி நிலைய வளாகத்துக்கு வியாழக்கிழமை (நவ.28) நண்பகல் 12.30 மணியளவில் வருகை தர உள்ளனா். விழாவில், ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சோ்ந்த சுமாா் 5 ஆயிரம் பயனாளிகளுக்கு ரூ. 89.73 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரை ஆற்றுகிறாா். விழாவில் அனைவரும் பங்கேற்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: புதுச்சேரியில் 4, 817 போ் எழுதினா்

பெண்ணிடம் 5 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு

கஞ்சா, போதை மாத்திரைகள் விற்பனை: 4 போ் கைது

நீட் தோ்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 4,855 போ் எழுதினா்

வீட்டினுள் இளைப்பாறிய புள்ளி மான்!

SCROLL FOR NEXT