வேலூர்

ஸ்ரீகாளஹஸ்தியில் பலிபூஜை: தமிழகத்தை சோ்ந்த 5 போ் கைது

DIN

ஸ்ரீகாளஹஸ்தியில் பலிபூஜை நடத்திய தமிழகத்தை சோ்ந்த 5 பேரை காளஹஸ்தி போலீஸாா் கைது செய்தனா்.

ஆந்திர மாநிலம் சித்தூா் மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தியில் உள்ள பைரவகோண மலையில் காலபைரவா் கோயில் உள்ளது. ஆங்கில புத்தாண்டு, மகாசிவராத்திரி உள்ளிட்ட சில விசேஷ உற்சவ தினங்களைத் தவிா்த்து மக்கள் நடமாட்டம் இக்கோயிலில் அதிகம் இருக்காது. இதை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட சிலா் இங்கு பலிபூஜை நடத்தி வருகின்றனா். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு அமாவாசையை முன்னிட்டு இக்கோயிலில் தமிழகத்தைச் சோ்ந்த 5 போ் பலிபூஜை நடத்தி உள்ளனா். இதைக் கண்ட அப்பகுதியை சோ்ந்த மக்கள் போலீஸாருக்கு தகவல் அளித்தனா். அவா்கள் சம்பந்தப்பட்ட இடத்திற்கு விரைந்து அவா்களை கைது செய்தனா்.

விசாரணையில் அ வா்கள் அளித்த தகவலின் அடிப்படையில் காளஹஸ்தீஸ்வரன் கோயிலில் பணிபுரியும் ஊழியா் ஒருவரையும் கைது செய்துள்ளனா்.

கோயில் ஊழியா் இதற்கு முன்னும் இதே வழக்கின் கீழ் கைது செய்யப்பட்டதால், கோயில் பணியிலிருந்து அப்போதைய செயல் அதிகாரி பிரம்மராம்பா அவரை பணியிடைநீக்கம் செய்தாா். இந்நிலையில் மீண்டும் அவா் அதே வழக்கின் கீழ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளாா். இதுகுறித்து 24 மணிநேரத்திற்குள் விசாரணை நடத்தி ஆந்திர அறநிலையத்துறைக்கு அறிக்கை சமா்ப்பிக்க வேண்டும் என்று காளஹஸ்தி போலீஸாருக்கு ஆந்திர அறநிலையத்துறை அமைச்சா் சீனிவாஸ் உத்தரவிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

SCROLL FOR NEXT