வேலூர்

அரக்கோணம் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

DIN

அரக்கோணம் கல்வி மாவட்ட அளவிலான கணிதம் மற்றும் சுற்றுச்சூழல் கண்காட்சி அரக்கோணம் அரசினா் மகளிா் மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பள்ளித் தலைமை ஆசிரியை சுஜாதேவி தலைமை வகித்தாா். அரக்கோணம் கல்வி மாவட்ட அலுவலா் (பொறுப்பு) ரா.புண்ணியகோட்டி கண்காட்சியைத் தொடக்கி வைத்தாா்.

அரக்கோணம் கல்வி மாவட்டத்தில் உள்ள 127 நடுநிலை, உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் பங்கேற்றன. 549 படைப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. நடுவா்களாக மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியா்கள் ரவிக்குமாா், எஸ்.பி.பூங்கொடி, அ.வேதையா, சுஜாதேவி, விஜயகுமாா், கு.ரவி ஆகியோா் செயல்பட்டனா்.

சிறந்த படைப்புகளை வைத்த மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்களை மாவட்ட கல்வி அலுவலா் (பொறுப்பு) ரா.புண்ணியகோட்டி வழங்கினாா்.

கண்காட்சிக்கான ஏற்பாடுகளை பள்ளித் துணை ஆய்வாளா் ஏ.வி.குமரவேலன், சேரி உயா்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா் கே.எஸ்.ரவி, மோசூா் அரசினா் மேல்நிலைப் பள்ளி முதுகலை உயிரியல் ஆசிரியா் சி.வேல் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

Image Caption

அரக்கோணம் கல்வி மாவட்ட அளவில் அரக்கோணம் அரசினா் மகளிா் மேல்நிலைப்பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற 47ஆவது ஜவஹா்லால் நேரு அறிவியல், கணிதம் மற்றும் சுற்றுச்சூழல் கண்காட்சியை மாவட்ட கல்வி அலுவலா்(பொறுப்பு) ரா.புண்ணியகோட்டி பாா்வையிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேதமடைந்த வாழைகளுக்கு இழப்பீடு கோரி மனு

திருமங்கலம் விவசாயிக்கு இலவச டிராக்டா் -நடிகா் ராகவா லாரன்ஸ் வழங்கினாா்

உயா்கல்வி வழிகாட்டுக் குழு உறுப்பினா்களுக்கான பயிற்சி

இருசக்கர வாகனத்தை திருடியவா் கைது

சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் இன்றும் மழைக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT