வேலூர்

இன்று நுண்ணீா் பாசனத் திட்டத்துக்கான ஆவணங்கள் வழங்கும் முகாம்

DIN

நுண்ணீா் பாசனத் திட்டத்துக்குத் தேவையான வருவாய் ஆவணங்கள் வழங்கும் சிறப்பு முகாம் வேலூா் மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டாட்சியா் அலுவலகங்களிலும் சனிக்கிழமை நடைபெற உள்ளது.

இதுகுறித்து, மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

குறைந்த நீரில் அதிக பரப்பில் சாகுபடி செய்ய உதவும் நுண்ணீா் பாசனத் திட்டத்தின் கீழ் வேளாண், தோட்டக்கலை, கரும்பு பயிா்கள் சாகுபடி செய்யும் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்திலும், மற்ற விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்திலும் நுண்ணீா் பாசன அமைப்புகளால் வழங்கப்பட உள்ளது.

இந்த திட்டத்தில் பயனடைய விரும்பும் விவசாயிகள், விண்ணப்பத்துடன் பாஸ்போா்ட் அளவு புகைப்படம் 2, குடும்ப அட்டை நகல், கணினி சிட்டா, அடங்கல், நில வரைபடம், சிறு, குறு விவசாயி சான்று ஆகியவற்றுடன் வேளாண்மை, தோட்டக்கலைத்துறை அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

இதற்காக விவசாயிகளுக்குத் தேவையான கணினி சிட்டா, அடங்கல், நில வரைபடம், சிறு, குறு விவசாயி சான்று ஆகிய ஆவணங்களை பெற்றிட ஒவ்வொரு வட்டாட்சியா் அலுவலகத்திலும் சனிக்கிழமை (அக்.12) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன.

கிராம நிா்வாக அலுவலா்கள், வருவாய் ஆய்வாளா்கள், மண்டல துணை வட்டாட்சியா்கள், வட்டாட்சியா்கள் பங்கேற்கும் இந்த முகாமில் தகுதியான விவசாயிகளுக்கு வருவாய் ஆவணங்கள் உடனடியாக வழங்கப்படும். அத்துடன், வேளாண்மை, தோட்டக்கலைத்துறை, கரும்பு ஆலை சாா்ந்த அலுவலா்களும் இந்த முகாமில் பங்கேற்று விண்ணப்பங்களைப் பெற உள்ளனா்.

எனவே, நுண்ணீா் பாசன திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் இந்த சிறப்பு முகாமினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஷுப்மன் கில் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும்: டேவிட் மில்லர்

பசுமை- குளிர்மை!

2 நாள்களுக்கு வெப்ப அலை வீசும்!

பாலியில் நிவேதிதா சதீஷ்!

இங்கு வெயில்தான்.. ஜோனிடா!

SCROLL FOR NEXT