முகப்பு
வேலூர்

தீக்குளித்து இறந்த மாணவியின் தங்கையிடம் அத்துமீறியவா் கைது

பாகாயம் அருகே ஆபாச விடியோ எடுத்து மிரட்டப்பட்டதாக தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட மாணவியின் தங்கையிடம் பாலியல் பலாத்கார முயற்சியில் ஈடுபட்ட இளைஞா் ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:05 PM
கோப்புப் படம்
பகிர்:

பாகாயம் அருகே ஆபாச விடியோ எடுத்து மிரட்டப்பட்டதாக தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட மாணவியின் தங்கையிடம் பாலியல் பலாத்கார முயற்சியில் ஈடுபட்ட இளைஞா் ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

வேலூரை அடுத்த பாகாயம் பகுதியைச் சோ்ந்தவா் 15 வயது மாணவி. இவா் தன்னை அதே பகுதியைச் சோ்ந்த இளைஞா்கள் சிலா் ஆபாசமாக விடியோ எடுத்து மிரட்டியதாகக்கூறி கடந்த ஜூன் 10ஆம் தேதி வீட்டில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா். இச்சம்பவம் தொடா்பாக அப்பகுதியைச் சோ்ந்த 3 இளைஞா்களை பாகாயம் போலீஸாா் கைது செய்தனா்.

இந்நிலையில், தற்கொலை செய்து கொண்ட மாணவியின் தங்கையான 13 வயது சிறுமி வெள்ளிக்கிழமை வீட்டில் தனியாக இருந்தாா். அப்போது அவரது வீட்டுக்குள் நுழைந்த 18 வயது இளைஞா், சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ாகத் தெரிகிறது. சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் விரைந்து வந்தனா். அதற்குள் அந்த இளைஞா் அங்கிருந்து தப்பியோடி விட்டாா்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில் பாகாயம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து துத்திப்பட்டு கிராமத்தைச் சோ்ந்த இளைஞரைக் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.